அல்குர்ஆனை சப்தமிட்டு ஓதுபவர் தர்மத்தை பகிரங்கமாக செய்பவர் போலாவார் மேலும் அல்குர்ஆனை இரகசியமாக ஓதுபவர்…

அல்குர்ஆனை சப்தமிட்டு ஓதுபவர் தர்மத்தை பகிரங்கமாக செய்பவர் போலாவார் மேலும் அல்குர்ஆனை இரகசியமாக ஓதுபவர் இரகசியமாக தர்மம் செய்தவர் போலாவார்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உக்பத் இப்னு ஆமிர் அல்ஜுஹனி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்குர்ஆனை சப்தமிட்டு ஓதுபவர் தர்மத்தை பகிரங்கமாக செய்பவர் போலாவார் மேலும் அல்குர்ஆனை இரகசியமாக ஓதுபவர் இரகசியமாக தர்மம் செய்தவர் போலாவார்

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

அல்குர்ஆனை சப்தமிட்டு ஓதுபவர் தர்மத்தை பகிரங்கமாக செய்பவர் போலாவார். மேலும் அல்குர்ஆனை இரகசியமாக ஓதுபவர் இரகசியமாக தர்மம் செய்தவர் போலாவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

فوائد الحديث

தர்மத்தை இரகசியமாக மறைத்து வழங்குவது மிகவும் சிறப்பானதாக இருப்பது போன்று அல் குர்ஆனை இரகசியமாக ஓதுவது மிகவும் சிறப்பானதாகும்.இவ்வாறு செய்வதில் இஹ்லாஸ் உளத்தூய்மை பேணப்படுவதோடு; முகஸ்துதி மற்றும் தற்பெருமையிலிருந்து விலகிக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும்.அல்குர்ஆனை கற்பித்தல் போன்ற தேவைக்காக சப்பதமாக ஓதுவது அனுமதிக்கப்பட்டதாகும்.

التصنيفات

அல்குர்ஆனிக் சிறப்புகள், உள செயற்பாடுகளின் சிறப்புகள், அல்குர்ஆன் ஓதுவதன் சிறப்புகள்