''உங்களில் ஒருவர் பள்ளிக்குச்சென்றால் அவர் உட்கார முன் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளட்டும்''

''உங்களில் ஒருவர் பள்ளிக்குச்சென்றால் அவர் உட்கார முன் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளட்டும்''

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூகதாதா அஸ்ஸுலமி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''உங்களில் ஒருவர் பள்ளிக்குச்சென்றால் அவர் உட்கார முன் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளட்டும்''.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

யாராவது ஒருவர் பள்ளிக்குள் எந்த நேரத்திலேனும் வந்தாலும் அல்லது எந்த நோக்கத்திற்கு வந்தாலும் அவர் அமரும் முன் பள்ளியின் காணிக்கை தொழுகை 'தஹிய்யதுல் மஸ்ஜித்' இரண்டு ரக்அத்துக்களை தொழுது கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் வலியுறுத்தியுள்ளார்கள்.

فوائد الحديث

பள்ளியினுள் அமர்வதற்கு முன் தஹிய்யத்துல் மஸ்ஜித் இரண்டு ரக்அத்துக்களை தொழுதுகொள்வது வரவேற்கத்தக்கதாகும்.

மேற்படி தொழும் கட்டளையானது பள்ளியினுள் சென்று உட்காருபவருக்காகும். ஆனால் யாராவது ஒருவர் பள்ளிக்குச்சென்று அமர்வதற்குமுன் வெளியே வந்துவிட்டால் அவ்வாறானவரை இக்கட்டளை உள்ளடக்காது.

ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கையில் தொழுகைக்காக சென்றவர் அவர்களுடன் சேர்ந்து தொழல் வேண்டும். அவர் இரண்டு ரக்அத் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழவேண்டிய அவசியம் இல்லை.

التصنيفات

உபரித் தொழுகை, பள்ளிவாயிலின் சட்டங்கள்