உண்மையில், எனக்குப் பிறகு நீங்கள் வெறுக்கும் சில விடயங்களும், ஆட்சியாளர்கள் செல்வங்களை தாங்களே அனுபவிக்கும்…

உண்மையில், எனக்குப் பிறகு நீங்கள் வெறுக்கும் சில விடயங்களும், ஆட்சியாளர்கள் செல்வங்களை தாங்களே அனுபவிக்கும் போக்கும் காணப்படும்' அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்? என்று கேட்டனர். அவர் கூறினார்: 'உங்களுக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் உங்களுக்குரியதை அல்லாஹ்விடம் கேளுங்கள்.' என்றார்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : உண்மையில், எனக்குப் பிறகு நீங்கள் வெறுக்கும் சில விடயங்களும், ஆட்சியாளர்கள் செல்வங்களை தாங்களே அனுபவிக்கும் போக்கும் காணப்படும்' அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்? என்று கேட்டனர். அவர் கூறினார்: 'உங்களுக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் உங்களுக்குரியதை அல்லாஹ்விடம் கேளுங்கள்.' என்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஒரு காலம் வரும் அதில் முஸ்லிம்களின் விவகராங்களை பொறுப்பேற்று நடத்தும் சில ஆட்சியாளர்கள் -அதிகாரிகள்- குடிமக்களின் செல்வங்கள் மற்றும் இது போன்ற உலகியல் விவகாரங்களை அவர்கள் அனுபவிப்பதோடு அவற்றை அவர்கள் நாடிய விதத்தில் கையாள்வார்கள். அதில் தங்களது குடிமக்களின் உரிமைகளை வழங்காது தடுத்துக்கொள்வார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அவர்களின் செயற்பாடுகளில் மார்க்கம் சார்ந்த ஏற்றுக்கொள்ள முடியாத வெறுத்தக்க விடயங்களும் காணப்படும். என்று நபியவர்கள் கூறிய போது ஸஹாபாக்கள் இவ்வாறான நிலையில் தாம் செய்ய வேண்டியது குறித்து விசாரித்தார்கள். அப்போது. அவ்வதிகாரிகள் செல்வங்களை உங்களுக்கு பகிராது அனுபவிக்கும் நிலையானது, நீங்கள் அவர்களுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய அவர்களின் கட்டளைகளுக்கு செவிதாழ்த்தி கட்டுப்பட்டு நடக்கும் கடமையை தடுத்து விடாதிருக்கட்டும்.) மாறாக இவ்வாறான நிலையில் நீங்கள் பொறுமையை கடைப்பிடித்து அவர்களுக்கு செவிசாய்த்து அவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள். அவர்களின் ஆட்சிக்கெதிராக முரண்பட்டுச் செல்லாதீர்கள். உங்களுக்குரிய உரிமை கிடைக்கவும், அவர்களை சீர்ப்படுத்துமாறும் அவர்களின் தீங்கு மற்றும் அநியாயத்திலிருந்து பாதுகாக்குமாறும் அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்று வழிப்படுத்தினார்கள்.

فوائد الحديث

இந்த ஹதீஸ் நபியவர்கள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நபித்துவ தீர்க்கதரிசனங்களுள் ஒன்றாகாக காணப்படுகிறது. நபியவர்கள் தனது சமூகத்தில் நடக்கவிருக்கும் விடயங்களை குறித்து அறிவித்துள்ளார்கள். அவை அவர்கள் அறிவித்தது போன்று நிகழும்.

சோதனைக்குள்ளானவர் தன்னை தேற்றிக் கொள்வதற்காக அவருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கும் சோதனைக் குறித்து தீர்வைப்பெற பகிரங்கமாக கேட்பது அனுமதிக்கப்பட்டதாகும். அவ்வாறு சோதனை ஏற்பட்டால் நன்மையை எதிர்பார்த்தவராக பொறுமையாக இருத்தல் வேண்டும்.

அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் கடைப்பிடித்தொழுகுவதே குழப்பங்கள் பிரச்சினைகளிலிந்து வெளியேறுவதற்கான- மீட்சிபெறுவதற்கான - ஒரே வழி.

நன்மையான விடயங்களில் மாத்திரம் ஆட்சியாளர்களுக்கு கட்டுபட்டு அவர்களின் கட்டளைகளுக்கு செவிதாழ்த்தி நடக்கவும் அவர்களிடமிருந்து அநியாயம் நிகழ்ந்தாலும் அவர்களுக்கெதிராக கிளர்ச்சி செய்வது கூடாது எனவும் வலியுறுத்தியிருத்தல்.

குழப்பகாரமான சோதனை நிறைந்த காலப்பகுதியில் ஸுன்னாவைப் பின்பற்றி நடப்பதுடன் அறிவார்ந்த முறையில் நடந்து கொள்ளல்.

ஆட்சியாளரிடமிருந்து அநியாயம் ஏதும் நிகழ்தாலும் ஒருவர் தன்மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

பாதிப்பை ஏற்படுத்தும் இரு விடயங்களில் மிகவும் சாதாரணமானதை அல்லது தீங்கை ஏற்படுத்துவனவற்றில் இரண்டு விடயங்களில் மிக இலகுவானதை தேர்வு செய்தல் என்ற சட்டவாக்கவிதிக்கான ஆதாரம் இந்த ஹதீஸிலிருந்து பெறப்படுகிறது.

التصنيفات

நாட்டுத் தலைவரின் கடமைகள்