நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப்…

நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான்

நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஷரீஆ சட்ட நிலைகளின்; -தீர்ப்புகளின்- மூன்று பிரிவுகள் குறித்து குறிப்பிடுகிறார்கள்.அவை :ஏதும் கூறாது மௌனம் காத்தவை- தடைகள், கட்டளைகள் என்பவைகளாகும். முதலாவது :இஸ்லாமிய ஷரீஆ ஏதும் தீர்ப்புகள் சொல்லாது விட்டுவிட்டவை. அதாவது எல்லா விவகாரங்களிலும்; அடிப்படை கட்டாயம் செய்யவேண்டும் என்பது அல்ல என்ற விதியின் அடிப்படையில் அமைந்தவை. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களி;ன் காலத்தை பொறுத்தவைரை ஒரு விவகாரம் கடமையாகிவிடும் அல்லது தடுக்கப்பட்டுவிடும் என்ற இறைத் தீர்ப்பு இறங்கும் என்ற பயத்தினால் நிகழாத ஒருவிடயம் குறித்து கேள்வி கேட்காது இருப்பது அவசியம் என்ற நிலை காணப்பட்டது இவ்வாறனவை அல்லாஹ் அடியார்கள் மீது செய்த அவனின் கருணையால் விட்டுவிட்டவையாகும். ஆனால் நபியவர்களின் மரணத்தின் பின் மார்;கத்தீர்ப்பை கோரியோ அல்லது மார்க்க விவாகாரங்களில் தேவையானவற்றை கற்பிக்கும்,கற்கும் நோக்கில் கோள்விகளைக் கோட்பது அனுமதிக்கப்பட்டதும் வலிறுத்தப்பட்ட விடயமுமாகும்.இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள 'கேள்விகேட்பதை தவிர்த்துக்கொள்ளுதல்'; என்பதன் அர்த்தம் வலிந்து தேவையில்லாத ஒன்றை கேள்விப்கேட்பதைக்; குறிக்கும். இவ்வாறு தேவையற்ற விடயங்களை பற்றி கேள்வி கேட்பது பனூ இஸ்ராஈல்களுக்கு நடந்ததைப் போன்ற ஒரு விவகாரத்திற்கு இட்டுச்சென்றுவிடும். அவர்களுக்கு அல்லாஹ் பசுமாட்டொன்றை அறுக்குமாறு கட்டளையிட்டான் அவ்வாறு அவனின் கட்டளைக்கு அடிபணிந்து நிறைவேற்றியிருந்தால் அவர்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்களாக மாறியிருப்பார்கள். ஆனால் அவர்கள் இந்த விவகாரத்தை சிரமப்படுத்திக்கொள்ளவே அல்லாஹ் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினான். இரண்டாவது : தடைகள் . இவற்றை செய்யாது விட்டுவிட்டால் கூலியும்,செய்தால் தண்டனையும் கிடைக்கும் ஆகவே தடைகளை முழுமையாக தவிர்ந்து கொள்வது கடமையாகும். மூன்றாவது: கட்டளைகள் . இதனை செய்பவருக்கு கூலியும் செய்யாது விட்;டுவிட்;டவருக்கு தண்டனையும் கிடைக்கும் ஆகவே இயலுமான அளவு செய்வது கடமையாகும்.

فوائد الحديث

தேவையான மிகவும் முக்கிய விடயங்களில் கவனம் செலுத்துதல் அவசியம்;;;, தற்போதைய நிலையில் தேவையற்ற விடயங்களை விட்டுவிட்டு, நிகழாத சட்டப்பிரச்சினைக் குறித்த விடயங்களில் கேள்வி கேட்பதைத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும.;

சில போது சட்டப்பிரச்சினைகளை சிக்களாக்கி,அதீத கருத்துமுரண்பாடுகளுக்கு வழிவகுத்து சந்தேகத்தின் வாயில்களை திறந்து விடும் கேள்விளை கேட்பது தடைசெய்யப்பட்டதாகும்;.

தடைசெய்யப்பட்ட அனைத்தையும் விட்டுவிடுமாறு கட்டளையிடப்பட்டிருத்தல். ஏனெனில் அவற்றைவிடுவதில்; எந்த சிரமும் கிடையாது அந்த வகையில் இங்கு தடை குறித்து பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவரின் இயலுமைக்கேட்ப கட்டளைகளை நிறைவேற்றுவமாறு கட்டளைப்பிரப்பிக்கப்பட்டிருத்தல்.ஏனெனில் அதனை நிறைவேற்றுவதில் சிரமம் அல்லது இயலாமை ஏற்படுவதற்கு இடமிருக்கிறது.இந்த வகையில் கட்டளைகள் ஒருவரின் இயலுமைக்கேட்ப செய்யுமாறு பணிக்கப்பட்டிருத்தல்.

அதிகம் கேள்வி கேட்பது தடைசெய்யப்பட்டிருத்தல். அறிஞர்கள் கேள்வியை இரண்டு வகைகயாக பிரித்துள்ளனர். ஒன்று : மார்க்க விடயத்தில் தேவையான கற்பிப்பதை நோக்காகக் கொண்டவை. இது வலியுருத்தப்பட்ட ஒரு விடயம் வரவேற்கத்தக்கதும் கூட. இவ்வகை கேள்விகளே ஸஹாபாக்களின் கேள்வியாக இருந்தது. இரண்டாவது: வலிந்து சிரமப்படுத்திக்கொள்ளும் விதத்தில் அமைந்த பயனற்ற கேள்விகள்.இவ்வகை கேள்விகள் தடை செய்யப்பட்டவை.

முன்சென்ற சமூகங்களில் நிகழ்ந்தது போன்று (நபிமார்களிடம் அதிக கேள்விகள் கேட்டு) தமது நபிக்கு மாற்றமாக நடப்பதை விட்டும் இந்த சமூகத்தை எச்சரித்தல்

தேவையில்லாத விடயங்களில் அதிகம் கேள்வி கேட்பதும் நபிமார்களுடன் முரண்பட்டுக்கொள்வதும் அழிவுக்கான ஒரு காரணமாகும் குறிப்பாக அல்லாஹ் மாத்திரம் அறிந்த மறைவான விடயங்கள் மற்றும் மறுமை நாள் நிலமைகள் போன்ற பகுத்தறிவிற்கு உட்படாத நம்பிக்கை சார் விடயங்களில் கேள்விகள் கேட்பதை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

மிகச் சிக்கலான குழப்பம் நிறைந்த கேள்விகளை கேட்பது தடை செய்யப்பட்டதாகும். இமாம் அவ்ஸாஈ அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒரு அடியானிடமிருந்து மார்க்க அறிவின் பரக்கத்தை அகற்ற விரும்பினால் அவனுடைய நாவிலிருந்து சிக்கலான குழப்பம் நிறைந்த கேள்விகளை வெளிவரச்செய்வான் அத்தகையவர்களை நான் மக்களில் அறிவு குறைந்தவர்களாக கண்டேன்.இப்னு வஹப் அவர்கள் தான் இமாம் மாலிக் ரஹ் அவர்கள் கூறியதை செவிமடுத்ததாக பின்வரும் செய்தியை கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மார்க்கம் சம்பந்தமாக அறிவில் தர்க்கம் செய்வது ஒருவரின் இதயத்திலிருந்து அந்த அறிவின் ஒளியை அகற்றி விடும்'

التصنيفات

முன்சென்ற இறைத்தூதர்கள், வார்த்தைகளின் கருத்துக்களும் சட்டம் பெறும் முறையும்