நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களுக்கு குத்பதுல் ஹாஜாவை இவ்வாறு கற்றுக் கொடுத்தார்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களுக்கு குத்பதுல் ஹாஜாவை இவ்வாறு கற்றுக் கொடுத்தார்கள்

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களுக்கு குத்பதுல் ஹாஜாவை இவ்வாறு கற்றுக் கொடுத்தார்கள் : 'இன்னல் ஹம்த லில்லாஹ், நஸ்தஈனுஹூ வனஸ்தஃபிருஹூ, வனஊது பிஹீ மின் ஷுரூரி அன்புஸினா, மன் யஹ்தில்லாஹு பலா முழில்லலஹூ, வமன் யுழ்லில் பலா ஹாதிய லஹூ, வஅஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ், வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ'' (பொருள் : நிச்சயமாக புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன! நாம் அவனைப் புகழ்கிறோம். அவனிடமே உதவி தேடுகிறோம். இன்னும் அவனிடமே பாவமன்னிப்புக் கோருகிறோம். மேலும் நமது உள்ளங்களில் தோன்றும் தீய எண்ணங்களை விட்டும் அவனிடமே பாதுகாவல் தேடுகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழிப்படுத்தி விட்டானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அல்லாஹ் யாரை வழி கெடுத்து விட்டானோ அவரை நேர்வழிப்படுத்துபவர் யாரும் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவனது நல்லடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்) என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள்; பின்வரும் மூன்று வசனங்களை ஓதுவார்கள் : 'மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, எவனைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கேட்டுக் கொள்வீர்களோ அந்த அல்லாஹ்வையும், மேலும் இரத்த உறவுகளைத் துண்டித்து நடப்பதையும் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்' (நிஸா : 01), 'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்' (ஆல இம்ரான் : 102), 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான வார்த்தையையே கூறுங்கள்;, (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்குவான், மேலும்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் கட்டுப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றியை ஈட்டிக் கொண்டுவிட்டார்;' (அஹ்ஸாப் : 70, 71).

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குத்பதுல் ஹாஜாவை தங்களுக்கு கற்றுத் தந்ததாக இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். குத்பதுல் ஹாஜா என்பது திருமண உரை மற்றும் ஜும்ஆ உரை மற்றும் இதுபோன்ற உரைகளையும், விசேட நிகழ்வுகளை ஆரம்பிக்கும் போதும் கூறும் வார்த்தைகளைக் குறிக்கும். இந்த குத்பாவானது எல்லா வகையான புகழுக்கும் பாராட்டுதளுக்கும் அல்லாஹ் தகுதியான்வன் ; என்பதை தெளிவுபடுத்தி, இணையில்லா ஏகனாகிய அவனிடம் உதவி கோரல், பாவங்களை மறைத்து அதனை அழித்து விடுவதற்கும் உதவி கோருதல், மற்றும் எல்லா வகையான கெடுதிகளை விட்டும் பாதுகாப்புத் தேடி அவனிடம் ஒதுங்குதல் போன்ற பல உன்னதமான விடயங்களை உள்ளடக்கியுள்ளது. நேர்வழியானது அல்லாஹ்வின் கைவசம் உள்ள விடயம் என்பதையும் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே யாருக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டுகிறானோ அவனை வழிதவறச் செய்பவன் எவருமில்லை. யாரை அல்லாஹ் வழி தவறச்செய்து விடுகிறானோ அவனை நேர்வழிப்படுத்த எவரும் கிடையாது. பின் அவர்கள் தவ்ஹீதின் மூலம் சான்று பகர்தல், அதாவது உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாருமில்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் தூதருமாவார் என தூதுத்துவச் சான்றினையும் குறிப்பிடுகின்றார்கள். இந்த குத்பாவை அல்லாஹ்வின் திருமுகம் நாடி அவனின் கட்டளைகளை ஏற்று அவன் தடுத்தவற்றை தவிர்ந்தும் இருக்குமாறும் அல்லாஹ்வை பயப்பாடுமாறும் கூறுகின்ற மூன்று வசனங்களை கூறி முடித்துள்ளார்கள். யார் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறாரோ அவர்களின் சொல்லும் செயலும் சீர்பெற்று பாவங்கள் மன்னிக்கப்பட்டு இவ்வுலகில் மனமான வாழ்வு கிட்டவும், மறுமையில் சுவர்க்கத்தை வெற்றி கொள்ளவும் காரணமாக அமையும்.

فوائد الحديث

நிகாஹ் மற்றும் ஜும்ஆ உரைகள் மற்றும் இது போன்ற உரைகளை ஆரம்பிக்கும் போது இந்த குத்பாவின் மூலம் ஆரம்பிப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.

குத்பாவானது இறைவனை புகழ்தல் இரண்டு ஷஹாதாக்கள் சில அல்குர்ஆன் வசனங்களை உள்ளடக்கியாத இருத்தல் வேண்டும்.

மார்க்க விவகாரங்களில் தனது தோழர்களுக்கு தேவையானவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுத்தமை.

التصنيفات

திருமணத்தின் சட்டங்களும் நிபந்தனைகளும்