'அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம்

'அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் 'அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது'

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

வானங்கள் பூமிகள் படைக்கப்படுவதற்கு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன் 'லவ்ஹுல் மஹ்பூலில்' படைப்பினங்களின் வாழ்வு, மரணம், வாழ்வாதாரம் போன்ற ஏனைய விடயங்கள் குறித்த விதிகள் தொடர்பாக நிகழவிருப்பவற்றை விரிவாக அல்லாஹ் எழுதிவிட்டான் என்பதை இந்த ஹதீஸில் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.அவை யாவும் அல்லாஹ்வின் தீர்ப்புக்கேற்ப நிகழ்ந்தே தீரும். இந்த உலகில் (உள்ளவை) படைக்கப்பட்டவை அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே இயங்கும். எனவே ஒரு அடியானுக்கு கிடைத்தவை ஒரு போதும் கைநழுவிச்சென்றிடாது, கைநழுவிச்சென்றவை ஒரு போதும் கிடைத்திடவும் மாட்டாது.

فوائد الحديث

இறைவிதியை ஈமான் கொள்வது கடமையாகும்.

'அல் கத்ர்' என்பது சிருஷ்டிகள் பற்றிய அல்லாஹ்வின் ஆழமான அறிவையும், அவை தொடர்பான அவனின் பதிவையும் நாட்டத்தையும், படைப்பையும்-உருவாக்கத்தையும்- குறிக்கும்.

வானங்கள்,பூமி படைக்கப்பட முன்னரே விதிகள் எழுதப்பற்றிருப்பதை ஈமான் கொள்வதானது உளத்திருப்தி , முழுமையாக இறைவனுக்கு கட்டுப்படுதல் போன்ற விடயங்களை மனிதனில் ஏற்படுத்தும்.

வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட முன்னரே அர்ரஹ்மானின் அரியணை (அர்ஷ்) நீரின் மீது இருந்ததது என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது.

التصنيفات

விதியின் படித்தரங்கள்