'நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் முஅத்தின் கூறுவது போன்று கூறுங்கள்'

'நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் முஅத்தின் கூறுவது போன்று கூறுங்கள்'

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் முஅத்தின் கூறுவது போன்று கூறுங்கள்'

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

முஅத்தின் -தொழுகை அழைப்பாளர்- பாங்கு கூறினால் அவற்றிற்கு அவர் கூறுவதை போன்று வார்த்தைக்கு வார்த்தை பதில் கூறுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதாவது அவர்-முஅத்தின்- அல்லாஹு அக்பர் எனக் கூறினால் அவரைத்தொடர்ந்து நாமும் அல்லாஹு அக்பர் கூற வேண்டும், அதே போன்று ஷாஹாதா - அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு, அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ் என்று கூறுகையில் தொடர்ந்து நாமும் அது போல் கூற வேண்டும். ஆனால் (ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் பலாஹ்) என்ற வார்த்தைகள் இவற்றிலிருந்து விதிவிலக்குப் பெறுகிறது. இந்த வார்த்தையினை முஅத்தின் கூறிய பின் (லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்) எனக் கூறுதல் வேண்டும்.

فوائد الحديث

பல முஅத்தின்களின் அதானைக் கேட்கும் சந்தர்ப்பங்களில் முதலாவது ஒருவரின் பாங்கை பின்தொடர்ந்து பதிலளித்ததன் பின் மற்றைய அதானை பின்தொடர வேண்டும் என்பது, இந்த ஹதீஸ் குறிப்பிடும் பொதுக்கருத்தாகும்.

தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக செல்லும் சந்தர்ப்பம் தவிர்ந்த மற்றைய அனைத்து நிலமைகளிலும் அதானுக்கு பதிலளிக்க வேண்டும்.

التصنيفات

அதானும் இகாமத்தும்