'ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறார்; என்பதைக்…

'ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறார்; என்பதைக் அவதானிக்கட்டும்'

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறார்; என்பதைக் அவதானிக்கட்டும்'.

[ஹஸனானது-சிறந்தது] [رواه أبو داود والترمذي وأحمد]

الشرح

ஒரு மனிதன் தனது குணத்திலும்; ஒழுக்கத்திலும் அவனது தோழர்கள் மற்றும் நண்பர்களின் குணங்களை ஒத்திருக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். நட்பானது பண்பாடு, நடத்தை மற்றும் ஏனைய விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் நீங்கள் ஒரு நல்ல நண்பரைத் தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப் படுகிறீர்கள். ஏனென்றால் ஒரு நல்ல நண்பன் நம்பிக்கை, (ஈமான்) நேர்வழி ஆகியவற்றுக்கு வழிகாட்டுவதுடன், நல்ல செயல்களில் தன் நண்பனுக்கு உதவுபவனாகவும் இருப்பான்.

فوائد الحديث

நல்ல நண்பர்களை தெரிவு செய்து அவர்களுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்றும் தீயவர்களுடன் சேர்ந்திருப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருத்தல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கே உறவினரை அல்லாமல் நண்பரை பற்றி குறிப்பிட்டதற்கான காரணம் நண்பர் உம்மால் உமது விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுபவர், ஆனால் சகோதரர் போன்ற நெருங்கிய உறவுகளை தேர்வு செய்வதில் உமக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. அவை அல்லாஹ்வால் உமக்கு தெரிவு செய்பட்டவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தோழமையை தெரிவு செய்வதில் நிதானம் அவசியமாகும்.

ஒருவர், இறைவிசுவாசியுடன் –உண்மையான முஃமினுடன்- சகவாசம் கொள்வதினால் தனது மார்க்கத்தை பலப்படுத்திக்கொள்கிறார். தீயவர்களின் சகவாசத்தினால் பலவீனப்படுத்திக் கொள்கிறான்

التصنيفات

மார்க்க ரீதியான நட்புவைத்தல், பகைத்தல் ஆகியவற்றின் சட்டங்கள்