முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும்…

முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும் கூட நான் கொண்டுவந்ததை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

இந்தச்சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் தன்னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட தான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால்,அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்"என நபி (ஸல்) அவர்கள் சத்தியமிட்டுக் கூறுகின்றார்கள்.அதாவது நபியவர்களின் காலத்திலும், அவர்களுக்குப் பின்னால் மறுமை வரை உள்ள அனைவருக்கும் இதனைக் கூறுகின்றார்கள்.எனவே நபியவர்களின் அழைப்புக் கிடைத்த எந்த யூதரோ,கிறிஸ்தவரோ,அல்லது வேறு மதத்தினரோ அன்னாரை ஏற்றுக் கொள்ளாத நிலையில் மரணித்தால் அவர் நரகில் நிரந்தரமாகவே இருப்பார். இங்கு யூத, கிறிஸ்தவர்களைக் குறித்துக் கூறக் காரணம் ஏனையோருக்குவிழிப்புணர்வூட்டுவதற்காகும்,ஏனெனில் யூத,கிறிஸ்தவர்கள் இறைவேதம் வழங்கப்பட்டவர்கள்,அவர்களது நிலையே இவ்வாறென்றால் வேதம் கொடுக்கப்படாத பிற நிராகரிப்பாளர்களின் கெதி அதை விட மோசமாகவே இருக்கும்.அனைவரும் நபியவர்களின் இம்மார்க்கத்தில் நுழைந்து,கட்டுப்படல் அவசியமாகும்

فوائد الحديث

நபி (ஸல்) அவர்களைப் பற்றிக் கேள்விப்படாதோர், இஸ்லாமிய அழைப்புக் கிடைக்காதோர் சலுகை அளிக்கப்பட்டவர்களாகும்.

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது அவசியமாகும், அவர்களது மார்க்கத்தின் மூலம் முன்னைய அனைத்து மார்க்கங்களும் மாற்றப்பட்டுவிட்டன, நபியவர்களை மறுத்து விட்டு பிற நபிமார்களை ஏற்பதால் எவ்விதப் பயனுமில்லை.

மரணத்தை நேரடியாகக் காணும் வரை கடுமையான நோயிலும் சரி மரணம் சம்பவிக்க சற்று முன்னரும் சரி இஸ்லாத்தின் மூலம் பயனடையலாம்.

உறுதியான ஆதாரம் மூலம் தரிபட்ட, அனைத்து அறிஞர்களும் ஒருமித்த, நபியவர்கள் கொண்டு வந்த ஒரு செய்தியை மறுப்பது இறைநிராகரிப்பாகும்.

التصنيفات

நம் தூதர் முஹம்மத் (ஸல்)