உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துபவற்றை விட்டுவிட்டு, சந்தேகத்தை ஏற்படுத்தாதவற்றை எடுத்துக்கொள். ஏனெனில், உண்மை…

உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துபவற்றை விட்டுவிட்டு, சந்தேகத்தை ஏற்படுத்தாதவற்றை எடுத்துக்கொள். ஏனெனில், உண்மை மனஅமைதியைத் தரும். பொய் சந்தேகத்தைத் தரும்.'

அபுல் ஹவ்ரா அஸ்ஸஃதி, (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களிடம், 'நீங்கள் நபியவர்களிடமிருந்து எதைக் கேட்டு மனனமிட்டுள்ளீர்கள்?' என்று கேட்டபோது, அவர்கள் கூறினார்கள் : 'நான் நபியவர்கள் இவ்வாறு கூறியதை மனனமிட்டுள்ளேன்: உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துபவற்றை விட்டுவிட்டு, சந்தேகத்தை ஏற்படுத்தாதவற்றை எடுத்துக்கொள். ஏனெனில், உண்மை மனஅமைதியைத் தரும். பொய் சந்தேகத்தைத் தரும்.'

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

தடுக்கப்பட்டவையா? தடுக்கப்படாதவையா? ஹராமா? ஹலாலா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும், வார்த்தைகள் மற்றும் செயற்களை விட்டுவிட்டு, ஹலாலான, நல்லவை என நீங்கள் உறுதியாக அறிந்துவைத்துள்ள, சந்தேகமற்றவற்றை எடுத்துக்கொள்ளுமாறு நபியவர்கள் ஏவுகின்றார்கள். ஏனெனில், உள்ளம் அதில் நிம்மதியையும், அமைதியையும் காண்கின்றது. சந்தேகத்திற்கிடமானவற்றில், அது தடுமாற்றத்தையும், கலக்கத்தையும் காண்கின்றது.

فوائد الحديث

ஒரு முஸ்லிம் தனது எல்லா விடயங்களையும், உறுதியின் மீது கட்டியெழப்பி, சந்தேகங்களை விட்டுவிடுவதும், தனது மார்க்கத்தில் தெளிவான அறிவோடிருப்பதும் கட்டாயமாகும்.

சந்தேகத்திற்கிடமானவற்றில் வீழ்ந்துவிடுவது தடுக்கப்பட்டுள்ளது.

நிம்மதியையும், மனஅமைதியையும் நீ அடைய விரும்பினால், சந்தேகத்திற்கிடமானவற்றைப் புறமொதுக்கிவிடு.

அல்லாஹ் தனது அடியார்களுக்குச் செய்துள்ள அருள். ஏனெனில், அவர்களுக்கு மனஅமைதியையும், நிம்மதியையும் தருபவற்றை அவன் ஏவி, தடுமாற்றத்தையும், கலக்கத்தையும் தருபவற்றைத் தடுத்துள்ளான்.

التصنيفات

முரண்பாடும் பலமான கருத்தைத் தெரிவு செய்தலும்