'(ஷிர்க்கான வாசகம் மூலம்) மந்திரித்தல், தாயத்துகள் கட்டுதல் (கணவன் மனைவியர்கிடையே அன்பை ,(ஈர்ப்பை)…

'(ஷிர்க்கான வாசகம் மூலம்) மந்திரித்தல், தாயத்துகள் கட்டுதல் (கணவன் மனைவியர்கிடையே அன்பை ,(ஈர்ப்பை) ஏறபடுத்துவதற்காகச் செய்யும் திவலா (முறை) ஆகியன இணைவைப்பாகும்'

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: '(ஷிர்க்கான வாசகம் மூலம்) மந்திரித்தல், தாயத்துகள் கட்டுதல் (கணவன் மனைவியர்கிடையே அன்பை ,(ஈர்ப்பை) ஏறபடுத்துவதற்காகச் செய்யும் திவலா (முறை) ஆகியன இணைவைப்பாகும்'.

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இணைவைப்போடு சம்பந்தப்பட்ட சில விடயங்களை இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் அவற்றுள் சில பின்வருமாறு: முதலாவது : மந்திரித்தல் : இணைவைப்பை உள்ளடக்கிய வார்த்தைகளின் மூலம் நிவாரணம் பெற வேண்டி ஜாஹிலிய்யா மக்கள் பயன்படுத்திய வாசகங்களை இது குறிக்கிறது. இரண்டாவது: மணிகள் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தாயத்துகள் : இவை குழந்தைகள் மற்றும் மிருகங்களை கண்திருஷ்டியிலிருந்து பாதுகாப்பதற்காக அணிவிக்கப்படுகின்றன. மூன்றாவது: திவலா, அதாவது கணவன் மனைவியருக்கிடையே பாசத்தை ஏற்படுத்து வதற்காக செய்யப்படுகின்ற ஒரு காரியத்தைக் குறிக்கும். மார்க்க ஆதாரங்களால் நிரூபிக்கப்பட்டோ, அனுபவ வாயிலாகவோ உணரப்பட்ட விடயம் அல்லாததாலும், வெறுமனே ஒரு பொருளை காரணமாக வைத்து அதில் நம்பிக்கை கொள்வதனாலும் இந்த விடயங்கள் யாவும் இணைவைத்தல் என்ற பாவத்தில் உள்ளடங்குகிறது. ஆனால் அல்குர்ஆன் ஓதுதல் போன்ற மார்க்கரீதியிலான வழிமுறைகள், அல்லது அனுப அறிவு வாயிலாக நிரூபிக்கப்பட்ட மருந்துகள் போன்ற கற்புலனாகும் வழிமுறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது அனுமதிக்கப் பட்டதாகும். ஆனால் அவை காரணகாரியங்கள் என்பதை ஏற்றுக்கொள்வதுடன் பயன் கிடைப்பதும் கிடைக்காதிருப்பதும் அல்லாஹ்விடம் உள்ள விடயம் என்பதையும் நம்ப வேண்டும்.

فوائد الحديث

ஓரிறைக் கொள்கை, இஸ்லாத்தின் நம்பிக்கைக் கோட்பாடு ஆகியவற்றில் கோலாரை ஏற்படுத்தக் கூடிய விடயங்களிலிருந்து பாதுகாத்தல்

இணைவைத்தல் அடங்கிய மாந்திரீகம், தாயத்துக்கள், திவலா ஆகியவற்றைப் பயன்படுத்துவது ஹராமாக்கப்பட்டிருத்தல்.

ஒரு மனிதன் இந்த மூன்று விடயங்களும் தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நீக்குவதற்கான வழிமுறைகள் -சாதனங்கள்- என நம்புதல் சிறிய வகை இணைவைப்பாகும். காரணம் அவன் வழிமுறையில்லாத ஒரு விடயத்தை வழிமுறையாக ஆக்கியதாகும். என்றாலும் ஒருவன் குறிப்பிட்ட பொருளானது சுயமாக நன்மை தரக்கூடியது தீங்கை எற்படுத்தக்கூடியது என நம்பினால் அவன் பெரிய இணைவைப்பில் வீழ்ந்து விட்டான்.

ஷிர்கான மற்றும் தடைசெய்யப்பட்ட காரண காரியங்களை செய்வதை விட்டும் எச்சரிக்கப்பட்டிருத்தல்.

அனுமதிக்கப்பட்ட ஓதிப்பாத்தலை தவிர ஏனையவை அனைத்தும் ஷிர்க்காகும், அதனை செய்வது ஹராமாகும்.

எப்போதும் உள்ளமானது அல்லாஹ்விடம் மாத்திரம் பற்றுக்கொண்டதாக இருப்பது அவசியமாகும். ஏனெனில் நலவோ கெடுதியோ அவன் ஒருவனிடம் மாத்திரமே உள்ளது, அவனுக்கு எந்த இணையும் கிடையாது, ஆக நலவை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் கொண்டுவர முடியாது, அதே போல் ஒரு தீமையை அல்லாஹ்வைத் தவிர வேறுயாராலும்; தடுக்கவும் முடியாது.

அனுமதிக்கப்பட்ட ஓதிப்பார்த்தல் உள்ளடக்கியிருக்க வேண்டிய மூன்று நிபந்தனைகள் -வரையறைகள்- பின்வருமாறு :

1-இது அல்லாஹ்வின் அனுமதியின்றி பயனளிக்க முடியாத சாதாரண ஒரு சிகிச்சை முறை என்பதாகவே எண்ண வேண்டும். 2. இது அல்குர்ஆன், அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் பண்புகள், நபியவர்கள் காட்டித்தந்த அனுமதிக்கப் பட்ட பிரார்த்தனைகள் மூலம் இருக்க வேண்டும். 3. அது புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் இருப்பதுடன் புரிந்து கொள்ளமுடியாத மாயையாகவோ தகடுகளை உள்ளடக்கியதாகவோ இருக்கக் கூடாது.

التصنيفات

மார்க்கரீதியான மந்திரித்தல்