'இயலாமை, புத்திசாலித்தனம் அல்லது புத்திசாலித்தனம், இயலாமை உட்பட ஒவ்வொரு விடயமும் இறைவிதியின் அடிப்படையிலேயே…

'இயலாமை, புத்திசாலித்தனம் அல்லது புத்திசாலித்தனம், இயலாமை உட்பட ஒவ்வொரு விடயமும் இறைவிதியின் அடிப்படையிலேயே நிகழ்கிறது

தாவூஸ் அவர்கள் கூறுகிறார்கள் : நான் அல்லாஹ்வின் தூதரின் தோழர்கள் சிலரை சந்தித்தேன் அவர்கள் 'அனைத்து விடயங்களும் இறை விதியின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என கூறுபவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகிறார்கள். 'இயலாமை, புத்திசாலித்தனம் அல்லது புத்திசாலித்தனம், இயலாமை உட்பட ஒவ்வொரு விடயமும் இறைவிதியின் அடிப்படையிலேயே நிகழ்கிறது.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு விடயமும் இறைவிதியின் அடிப்படையில் நிகழ்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறார்கள். இயலாமை 'அஜ்ஸ்' என்பது இம்மை மறுமை விவகாரங்களில் கட்டாயம் செய்யவேண்டியவற்றை விட்டுவிடுவது,எதிர்காலத்தில் செய்யவென குறித்த நேரத்தில் செய்வதைவிட்டுப் தாமதப்படுத்துதல். 'கைஸ்' (புத்திசாலித்தனம்) என்பது இம்மை மறுமை விடயங்களில் புத்திசாதுரியத்துடன் சுறுசுறுப்பாக ஈடுபடுதலைக் குறிக்கும். அல்லாஹ் இயலாமை மற்றும் புத்திசாலித்தனம் மற்றும் அனைத்து விடயங்களையும் நிர்ணயித்துள்ளான்.அவை அனைத்தும் அவனின் பூரண அறிவு மற்றும் நாட்டத்துடனேயே இவ்வுலகில் நிகழ்கிறது.

فوائد الحديث

இறைவிதி குறித்த ஸஹாபாக்களின் நம்பிக்கை குறித்து தெளிவுபடுத்தப்பட்டிருத்தல்.

இயலாமை,உற்சாகம் உட்பட அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நிகழ்கிறது.

அல்லாஹ்வின் தூதரின் செய்திகளை பரிவர்த்தனை செய்வதில் நபித்தோழர்களுக்கிருந்த உறுதிப்பாடும் கவனமும் இந்த ஹதீஸில் காணப்படுகின்றமை.

நன்மை தீமை அனைத்தும் இறைவிதியின் படியே நிகழும் என்பதை நம்பிக்கை கொள்ளுதல்.

التصنيفات

கழா, கத்ர் மீது விசுவாசம் கொள்ளுதல், விதியின் படித்தரங்கள்