'வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக,…

'வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்:( நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும்

அபூ ஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்துள்ளார்கள்: வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரு மொழியில் ஓதி, அதை முஸ்லிம்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், ('வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்:( நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும்இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோருக்கும், யஃகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்'' என்று கூறினார்கள்.'(அல்பகரா (136) வசனம்

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

வேதம் கொடுக்கப்பட்டோர் தமது வேதங்களில் இருந்து கூறும் விடயங்களினால் ஏமாறுவதை விட்டும் தனது சமூகத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எச்சரித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தில் யூதர்கள் தங்களது மொழியான ஹிப்ருவில் தவ்ராத்தை ஓதி அதனை அறபு மொழியில் தெளிவு படுத்துபவர்களாக இருந்தார்கள். ஆகவே வேதக்காரர்கள்; கூறும் விடயங்களில் பொய்யிலிருந்து உண்மையை பிரித்தறியமுடியாமல் இருப்பதினால் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் கூறுவதை பொய்யென்றோ உண்மையென்றோ கூறவேண்டாம் எனக்கூறினார்கள். ஏனெனில் அல்லாஹ் எமக்கு அல்குர்ஆனிலும் அவர்களின் வேதத்திலும் இறக்கியருளியவைகளையும் ஈமான் கொள்ளுமாறு பணித்துள்ளான்.எமது ஷரீஆவில், அவர்கள் கூறிப்பிடுகின்றவற்றில் பொய் மற்றும் உண்மையை தெளிவுபடுத்தும் விடயங்கள் குறிப்பிடப்படாததினால் அவர்கள் தங்களது வேதங்களில் இருந்து குறிப்பிடுபவற்றில் போலியானவை எது என்பதை நாம் அறிந்து கொள்ளவதற்கான எந்த வழியும் கிடையாது. இதனால் அவர்கள் திரிபுபடுத்தியவற்றில் நாமும் பங்காளர்களாக இருக்காதிருக்க அவர்களை உண்மைப்படுத்தாமலும் பொய்ப்பிக்காமலும் நாம் மௌனம் காத்து எதுவும் கூறாது நிறுத்திக்கொள்கிறோம்.இதுவே உண்மையான விடயமாகும். அது உண்மையாக இருந்து நாம் அதை மறுத்தாள் நாம் ஈமான் கொள்ளவேண்டும் என்று கடட்டளையிடப்பட்டவற்றை மறுத்தவர்களாக-புறக்கணித்தவர்களாக- ஆகிவிடுவோம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இவ்வாறு நாம் கூறவேண்டும் என கட்டளையிட்டுள்ளார்கள். 'நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளியவற்றையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோருக்கும், யஃகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளியவற்றையும் மற்றும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் வழங்கியவற்றையும், மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கிய அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்' என (முஸ்லிம்களே!) நீங்கள் கூறுங்கள். அல்பகரா (136 )

فوائد الحديث

வேதங்கள் வழங்கப்பட்டோர் மக்களிடம் கூறும் செய்திகளை மூன்று பகுதிகளாக குறிப்பிட முடியும் அவை பின்வருமாறு :

முதலாம் பகுதி : அல்குஆன் மற்றும்; அஸ்ஸுன்னாவுக்கும் ஒத்துப்போகும் செய்திகள்; இவையாவும் உண்மையென ஏற்றுக்கொள்ளப்படும்.

இரண்டாம் பகுதி: அல்குர்ஆன் மற்றும்; அஸ்ஸுன்னாவுக்கு முரணாக அமையும் செய்திகள் இவை பெய்யானவை,புறக்கணிக்கப்படும்.

மூன்றாம் பகுதி :அல் குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவில் அந்த செய்திகள் உண்மையென்பதற்கோ பொய்யென்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லாதவை.இவற்றை தகவலாக அறிவிக்கலாம்.ஆனால் அவற்றை பொய்பிக்கவோ அல்லது உண்மைப்படுத்தவோ கூடாது.