உங்களில் ஒருவர் வுழூ செய்து, பின்னர் தனது காலுறைகளை அணிந்துகொண்டால், அவற்றுடனேயே தொழட்டும். அவற்றின் மீது…

உங்களில் ஒருவர் வுழூ செய்து, பின்னர் தனது காலுறைகளை அணிந்துகொண்டால், அவற்றுடனேயே தொழட்டும். அவற்றின் மீது மஸ்ஹு செய்துகொள்ளட்டும். பின்பு – அவர் நாடினால் - குளிப்புக் கடமையாகிவிட்டாலே தவிர, அதனைக் கழற்றவேண்டியதில்லை

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களில் ஒருவர் வுழூ செய்து, பின்னர் தனது காலுறைகளை அணிந்துகொண்டால், அவற்றுடனேயே தொழட்டும். அவற்றின் மீது மஸ்ஹு செய்துகொள்ளட்டும். பின்பு – அவர் நாடினால் - குளிப்புக் கடமையாகிவிட்டாலே தவிர, அதனைக் கழற்றவேண்டியதில்லை.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை அத்தாரகுத்தனீ பதிவு செய்துள்ளார்]

الشرح

இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் வுழூ செய்த பின்னர் தனது காலுறைகளை அணிந்து, அதற்குப் பின்னர் வுழூ முறிந்து மீண்டும் வுழூ செய்ய நாடினால், - அவர் விரும்பினால் - அவ்விரண்டின் மீதும் மஸ்ஹு செய்துவிட்டு, அவற்றுடனேயே தொழலாம் என்றும், குறிப்பிட்ட காலத்திற்கு அவற்றைக் கழற்றாமல் இருக்கலாம் என்றும் தெளிவுபடுத்துகின்றார்கள். ஆனால், அவருக்குக் குளிப்புக் கடமையாகவிட்டால், காலுறையைக் கழற்றிவிட்டுக் குளிக்கவேண்டும்.

فوائد الحديث

காலுறைகளை முழுமையான சுத்த (வுழூ) நிலையில் அணிந்தால் மாத்திரமே மஸ்ஹு செய்யலாம்.

ஊரிலேயே இருப்பவர் ஒரு நாள் முழுவதும், பயணத்தில் இருப்பவர் மூன்று நாட்கள் முழுவதும் மஸ்ஹு செய்யலாம்.

காலுறைகள் மீது மஸ்ஹு செய்வதென்பது, பெருந்தொடக்குக்கு அல்லாமல், சிறுதொடக்குக்கு மாத்திரம் குறிப்பானதாகும். பெருந்தொடக்கைப் பொறுத்தவரை மஸ்ஹு செய்யமுடியாது. மாறாக, காலுறைகளைக் கழற்றிவிட்டு, பாதங்களைக் கழுவுவது அவசியமாகும்.

செருப்புக்கள், காலுறைகள் போன்றவை சுத்தமாக இருந்து, அவற்றால் பள்ளிவாசலுக்கோ, தொழுபவர்களுக்கோ தொந்தரவு இல்லாமல் இருக்கும் பட்சத்தில் - யூதர்களுக்கு மாறுசெய்யும் நோக்கில் - அவற்றுடன் தொழுவது விரும்பத்தக்கதாகும். ஆனால் விரிப்புக்கள் இடப்பட்டிருக்கும் பள்ளிவாசலில் அவ்வாறு தொழக்கூடாது.

காலுறைகளில் மஸ்ஹு செய்வதென்பது, இந்த சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள இலகுபடுத்தல் சலுகைகளில் ஒன்றாகும்.

التصنيفات

காலுரையில் தடவுதல்