'மக்கள் ஒரு அநியாக்காரணைக் கண்டும் அவனை தடுக்காதிருந்தால் விரைவில் அவர்கள் அனைவர் மீதும் தண்டனையை…

'மக்கள் ஒரு அநியாக்காரணைக் கண்டும் அவனை தடுக்காதிருந்தால் விரைவில் அவர்கள் அனைவர் மீதும் தண்டனையை இறக்குவான்.'

அபூபக்ர் அஸ்ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: மக்களே நீங்கள் ' 'யாஅய்யுஹல்லதீன ஆமனு அலைக்கும் அன்புஸகும் லா யழுர்ருகும் மன் ழல்ல இதஹ்ததைத்தும்' பொருள் : (விசுவாசங் கொண்டோரே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறியவர் உங்களுக்கு எவ்வித தீங்கும் செய்ய மாட்டார், அல்லாஹ்வின் பக்கமே உங்கள் யாவரின் மீட்சி இருக்கிறது, நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி (அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவித்துவிடுவான்) என்ற வசனத்தை (அதன் ஆழமான கருத்தை தெரியாது) ஒதுகின்றீர்கள் ' நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறுவதைக் கேட்டேன் : 'மக்கள் ஒரு அநியாக்காரணைக் கண்டும் அவனை தடுக்காதிருந்தால் விரைவில் அவர்கள் அனைவர் மீதும் தண்டனையை இறக்குவான்.'

[ஸஹீஹானது-சரியானது] [رواه أبو داود والترمذي والنسائي في الكبرى وابن ماجه وأحمد]

الشرح

மக்கள் 5ம் அத்தியாயத்தின் 105 ம் வசனத்தை ஓதிவருவருவதாக அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகிறார்கள். (விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறியவர் உங்களுக்கு எவ்வித தீங்கும் செய்ய மாட்டார்). ஒரு மனிதனைப் பொருத்தவரை அவனை மாத்திரம் சீர்செய்துகொள்வதற்காக பாடுபடுவதுதான் கடமை என்பதையும் அத்துடன் மற்றவர் வழிதவறிச்செல்வதால் தனக்கு அது ஒருபோதும் தீங்கு விளைவிக்காது என்பதையும், நன்மையை ஏவி தீமை தடுப்பதற்கான பொறுப்புக் கிடையாது அது தேவையில்லை என்பதாகவே இவ்வசனத்தின் மூலம் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வசனத்தின் கருத்து அதுவல்ல. நபிஸல்லல்லாஹு அவர்கள் கூறுவதை தான் செவிமடுத்ததாக அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு குறித்த பின்வரும் செய்தியை அறிவிக்கிறார்கள் : மக்கள் அநியாயம் செய்யும் ஒருவனை கண்டு, தடுப்பதற்கான சக்தியிருந்தும் அவனின் அநியாயத்தை தடுக்காதிருந்தால் அல்லாஹ் அவனின் தண்டனையை அனைவர் மீதும் விரைவில் இறக்கிவைப்பான். இத்தண்டனைக்கு தீமையை செய்தவனும் அதனை கண்டு மௌனம் காத்தவனும் உட்படுவான்.

فوائد الحديث

பரஸ்பரம் அறிவுரைக் கூறிக்கொள்வதும் நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதும் முஸ்லிம்களின் மீதுள்ள கடமையாகும்

அல்லாஹ்வின் பொதுத் தண்டனையானது அநியாயத்தைப் புரிந்தவனையும், அநியாயத்தைத் தடுப்பதற்கான முழுப்பலமும் சக்தியும் இருந்தும் அநியாயத்தை தடுக்காது மௌனம் காத்தவரையும் உள்ளடக்கிக்கொள்ளும்.

அல்குர்ஆன் வசனங்களின் கருத்துக்களை சரியான முறையில் புரியவைத்து அதனை மக்களுக்கு கற்றுக் கொடுத்தல்.

குர்ஆன் வசனத்திற்கு அல்லாஹ் நாடாத அர்த்தத்தை புரிந்து கொள்ளாதிருப்பதற்காக, அல்லாஹ்வின் வேதத்தை தெரிந்து கொள்வதில் கரிசனை செலுத்துவது மிகவும் அவசியமாகும்.

நன்மையை ஏவி தீமையை தடுப்பதை விட்டு விடுவதுடன் நேர்வழியை அடைந்து கொள்ள முடியாது.

வசனத்தின் சரியான விளக்கம்: பாவங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பாவங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொண்டால், தடுக்கப்பட்டவற்றை செய்வதன் மூலம் வழிகெட்டுப்போனோரின் வழிகேட்டினால் நன்மையை ஏவவும் தீமையைத் தடுக்கவும் சக்தியற்று இருந்தாலும் நீங்கள் அத்தடைகளை செய்யாது விலகியிருக்கும் வரையில் உங்களுக்கு அது தீங்கு விளைவிக்காது.

التصنيفات

நன்மையை ஏவி தீமையைத் தடுத்தலின் சட்டம்