'ஆதமின் மகனே! நீர் (எனது திருப்தியை அடைந்திட) செலவு செய்வீராக. உமக்காக நான் செலவு செய்வேன் . என்று அல்லாஹ்…

'ஆதமின் மகனே! நீர் (எனது திருப்தியை அடைந்திட) செலவு செய்வீராக. உமக்காக நான் செலவு செய்வேன் . என்று அல்லாஹ் கூறினான்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'ஆதமின் மகனே! நீர் (எனது திருப்தியை அடைந்திட) செலவு செய்வீராக. உமக்காக நான் செலவு செய்வேன் . என்று அல்லாஹ் கூறினான்'.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஆதமின் மகனே நீ கட்டாயமான மற்றும் ஆகுமான விடயங்களில் செலவு செய்வீராக, நான் உனக்கு அதனை தாராளமாகவும் அதற்குப் பதிலாகவும் நிரப்பமாகத் தருவேன். மேலும் உனது செல்வத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவேன் என அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு செய்தியை தெரிவிக்கிறார்கள்.

فوائد الحديث

தர்மம் செய்யவும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யவும் ஆர்வமூட்டப்பட்டிருத்தல்.

நல்ல காரியங்களில் செலவிடுவதானது வாழ்வாதாரம் மேம்படவும் அது பெருகுவதற்குமுரிய மிகப்பொரும் காரணங்களில் ஒன்றாக உள்ளது. அத்துடன் அடியான் செலவிட்டதிற்கு பதிலாக அதே போன்ற ஒன்றை அவனுக்கு பகரமாக வழங்குகிறான்.

இந்த ஹதீஸ் அல்லாஹ் கூறியதாத நபி ஸல்லல்லாஹு அவர்கள் அறிவிக்கும் நபி மொழியாகும். இவ்வாறான ஹதீஸ்கள் 'ஹதீஸ் குத்ஸீ (புனிதமிக்க நபிமொழி), 'ஹதீஸ் இலாஹீ' (தெய்வீக நபிமொழி) எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறன. இவ்வாறான ஹதீஸ்களின் வார்த்தையும் கருத்தும் அல்லாஹ்விடமிருந்துமுள்ளதாகும். என்றாலும் அல்குர்னுக்குரிய தனித்துவங்கள் இதற்குக் கிடையாது. அதாவது அல்குர்ஆன் பெற்றுள்ள தனித்துவங்களான ஓதுவது வணக்கம், ஓதுவதற்கு வுழு செய்து கொள்ளுதல் (விரும்பத்தக்கது),சவால் விடுதல், அற்புதம் போன்றவை இவ்வகையான ஹதீஸ்களுக்கு கிடையாது.

التصنيفات

செலவளித்தல், உபரியான தர்மம்