அனந்தரச் சொத்துக்களை (அவற்றில் அளவீடு கூறப்பட்ட பங்குகளை) உரியவர்களிடம் சேர்த்து விடுங்கள். எஞ்சியவை,…

அனந்தரச் சொத்துக்களை (அவற்றில் அளவீடு கூறப்பட்ட பங்குகளை) உரியவர்களிடம் சேர்த்து விடுங்கள். எஞ்சியவை, மிகநெருங்கிய ஆணுக்கு உரியதாகும்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அனந்தரச் சொத்துக்களை (அவற்றில் அளவீடு கூறப்பட்ட பங்குகளை) உரியவர்களிடம் சேர்த்து விடுங்கள். எஞ்சியவை, மிகநெருங்கிய ஆணுக்கு உரியதாகும்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இங்கு நபியவர்கள், அனந்தரச் சொத்துக்களைப் பிரிப்பதற்குப் பொறுப்பாக இருப்பவர்கள், தகுதியானவர்களுக்கு, அல்லாஹ் விரும்பும் பிரகாரம், நீதமான, மார்க்க அடிப்படையிலான பங்கீடாக பங்கீடு வைக்கவேண்டும் என வலியுறுத்துகின்றார்கள். எனவே, வரையறுக்கப்பட்ட பங்கீடுகளை உடையவர்களுக்கு, அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி அவர்களது பங்கீடு வழங்கப்படும். மூன்றில் இரண்டு, மூன்றில் ஒன்று, ஆறில் ஒன்று, அரைவாசி, நான்கில் ஒன்று, எட்டில் ஒன்று என்பனவே அவையாகும். அதற்குப் பின்னர் எஞ்சியவை, மரணித்தவருக்கு மிக நெருக்கமான ஓர் ஆணுக்கு வழங்கப்படும். அவர்கள் 'அஸபா' என அழைக்கப்படுவார்கள்.

فوائد الحديث

இந்த ஹதீஸ் சொத்துப் பங்கீடு பற்றிய ஒரு அடிப்படை விதியாக உள்ளது.

சொத்துக்களை பங்கீடு வைக்கும் போது, அளவீடு குறிக்கப்பட்டவர்களுக்கே முதலில் பங்கீடு வைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு அளவீடு குறிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பின் எஞ்சியவை, 'அஸபா'க்களுக்கு வழங்கப்படும்.

மிக நெருக்கமானவர்களே படிப்படியாக முற்படுத்தப் படவேண்டும். எனவே, தந்தை போன்ற மிக நெருங்கிய ஒரு 'அஸபா' இருக்கும் போது, சிறிய தந்தை போன்ற தூரமான ஒரு 'அஸபா'வுக்கு சொத்துக் கிடைக்கமாட்டாது.

அளவீடு குறிக்கப்பட்டபவர்கள் முழு சொத்தையும் பகிர்ந்துகொள்ளும் போது, அதாவது எந்தவொன்றும் எஞ்சாமல் போகும் போது, 'அஸபா' வாக உள்ளவருக்கு எந்தவொன்றும் கிடைக்க மாட்டாது.

التصنيفات

பங்கு வழங்கப்படாமல் எஞ்சியதைப் பெறுவோர்