'ஆதமுடைய மகன் நிரப்பக் கூடிய பைகளில் மிகவும் கெட்டது அவனின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை…

'ஆதமுடைய மகன் நிரப்பக் கூடிய பைகளில் மிகவும் கெட்டது அவனின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நிமிர்த்திக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்'

மிக்தாம் இப்னு மஃதீ கரிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் : 'ஆதமுடைய மகன் நிரப்பக் கூடிய பைகளில் மிகவும் கெட்டது அவனின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நிமிர்த்திக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்'.

[ஸஹீஹானது-சரியானது] [رواه الإمام أحمد والترمذي والنسائي وابن ماجه]

الشرح

மனிதன் தனது ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ளல் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். மருத்துவ அடிப்படைகளுள் ஒன்றாக கருதப்படும் இவ்விடயம் குறித்து எம்மை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வழிப்பபடுத்துகிறார்கள். ஒருவர் உயிருடன் இருக்கவும், தனது அத்தியாவசியப் பணிகளைச் செய்யவதற்கு வலிமை பெறுவதற்கு போதுமான அளவு மட்டுமே சாப்பிடுதல் வேண்டும். நிரப்பப்படும் பாத்திரங்களில் மிகவும் ஆபத்தானது வயிறாகும், வயிறு நிறைய அளவுக்கு மீறி சாப்பிடுவதன் விளைவாக எண்ணற்ற கொடிய நோய்கள் தோன்றும். அந்த நோய்கள் விரைவிலோ காலம் தாழ்த்தியோ, உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ ஏற்பட வாய்ப்புண்டு. ஒருவர் தனது வயிற்றை நிரப்ப வேண்டும் என்றால், அவர் இரைப்பையை மூன்றாகப் பிரித்து, மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும், இன்னொரு பகுதியை பானத்திற்கும், இன்னொரு பகுதியை சுவாசிக்கவும் வைத்துக்கொள்ளல் வேண்டும். காரணம் அவருக்கு நெருக்கடி மற்றும் ஆபத்து ஏற்படாமலிருக்கவும் அல்லாஹ் அவருக்கு கடமையாக்கியுள்ள மார்க்க மற்றும் உலக விவகாரங்களில் உள்ள கடமைகளை சோம்பலின்றி நிறைவேற்றுவதற்குமாகும்.

فوائد الحديث

உன்னுதல் பருகுவதில் எல்லை மீறிச் செல்லாதிருத்தல். இது மருத்துவத்தின் அடிப்டைகளில் பிரதான அடிப்டையாகும். ஏனெனில் மிதமிஞ்சிய உணவுப்பழக்கம் கொடிய நோய்களை ஏற்படுத்தும்.

உண்பதின் நோக்கம் உடல் ஆரோக்கியத்தையும், வலிமையையும் பாதுகாப்பதாகும். இதில்தான் வாழ்க்கையின் சீர்மை தங்கியுள்ளது.

வயிறு புடைக்க(நிறைய) உண்பதில் உடல்ரீதியானதும் மார்க்கரீதியானதுமான பாதிப்புகள் உண்டு. உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : வயிறு நிறைய சாப்பிடுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது உடலுக்கு கேடையும், தொழுகையில் சோம்பலையும் ஏற்படுத்தும்.

உண்பதை பொறுத்தவரை சட்டரீதியாக கட்டாயமானது,(வாஜிப்) அனுமதியளிக்கப்பட்டது (ஜாஇஸ்), (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கது 'ஹராம்'; தடைசெய்யப்பட்டது முஸ்தஹப் விரும்பத்தக்கது என ஐந்தாக வகுக்க முடியும். உயிரைப் பாதுகாக்கும் நிலையில் அமைந்தவை அதாவது உண்ணுவதை தவிர்த்தால் உயிராபத்து ஏற்படும் என்ற நிலை காணப்படுமாயின் அவ்வேளை உண்பது கட்டாயமாகும். தேவையான அளவை விட சிறிது அதிகமாக உண்பது இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதால் இது அனுமதிக்கப்பட்டது. தேவைக்கு மேலதிகமாக உண்பதால் பாதிப்பு ஏற்படும் என பயப்படத்தக்க நிலையில் உள்ளவை இது மக்ரூஹ் ஆகும். உண்பதால் தெளிவாக பாதிப்பு ஏற்படும் என்றிருந்தால் அது ஹராமாகும். அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கு தேவையான அளவு உண்ணுதல் முஸ்தஹப்பாகும். இதனையே ஹதீஸில் சுருக்கமாக முன்று படித்தரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவது. வயிறு நிறை உண்ணுதல். இரண்டாது : தனது முதுகெழும்பை நிமிர்த்துகொள்ளும் அளவுக்குத் தேவையான சில கவலங்களை உண்ணுதல் மூன்றாவது : வயிற்றை மூன்றாக பிரித்து உணவுக்கும் தண்ணீருக்கும் சுவாசிக்கவும் ஒவ்வொரு பகுதியை ஏற்படுத்திக்கொள்ளுதல். இவை அனைத்திற்கும் உண்ணும் உணவு ஹலாலாக இருப்பது அவசியம்.

இந்த ஹதீஸ் மருத்துவத்துறை சார்ந்த பிரதான அடிப்படை ஒன்றை உள்ளடக்கியுள்ளது.

மருத்துவ அறிவியலானது மூன்று பிரதான அடிப்படைகளைக் கொண்டுள்ளது அவையாவன: உடல்திரனை பாதுகாத்தல், உணவுமுறை கட்டுப்பாடு, மற்றும் கழிவுவெளியேற்றம் ஆகியவைகளாகும். ஹதீஸ் அவற்றில் முதல் இரண்டையும் உள்ளடக்கியது, இது குறித்த அல்லாஹ்வின் கூற்று பின்வருமாறு: 'மேலும் உண்ணுங்கள், பருகுங்கள், ஆனால் வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக, அவன் வீண்விரயம் செய்வோரை விரும்புவதில்லை.' (அல்-அஃராப்: 31)

மனிதனின் மார்க்க மற்றும் உலக நலன்களை இஸ்லாமிய ஷரீஆ உள்ளடக்கியிருப்பதால் அதன் முழுமைத்துவம் எடுத்துக்காட்டப்பட்டிருத்தல்.

ஷரிஆ கலைகளுள்; மருத்துவக் கொள்கைகளும் அதன் பல்வேறு வகைகளும் ஒன்றாகும், அவை தேன் மற்றும் கருஞ்சீரகம் பற்றிய அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஷரியாவின் தீர்ப்புகள் யாவும் உயர் இலக்குகளையும் நுட்பங்களையும்; கொண்டிருப்பதோடு தீங்குகளைத் தடுப்பதையும் நலன்களை அடைவதையும் அடிப்படையாகக் கொண்டவை.

التصنيفات

மனோ இச்சையைக் கண்டித்தல்