அடியான் ஒருவனுக்கு மக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி…

அடியான் ஒருவனுக்கு மக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே மரணித்து விட்டால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்துவிடுகிறான்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக மஃகில் இப்னு யஸார் ரழியல்லாஹு அவர்கள் கூறினார்கள் : அடியான் ஒருவனுக்கு மக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே மரணித்து விட்டால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்துவிடுகிறான்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

மக்களுக்கு பொறுப்பாளராகவும், நிர்வாகியாகவும் அல்லாஹ் ஓவ்வொருவரையும் ஆக்கியுள்ளதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள். குறிப்பிட்ட நிர்வாகமானது அமீர் (கலீபா) போன்ற பொது (நாட்டு) நிர்வாகமாகவோ அல்லது குடும்பத்தினூடான வீட்டு நிர்வாகம் போன்ற குறிப்பான நிர்வாகமாக இருந்தாலும் சரியே இவையனைத்தையும் இது உள்ளடக்குகிறது. ஆகவே தனது குடிமக்களின் உரிமைகளில் அலட்சியமாக நடந்து, அவர்களுக்கு மோசடி செய்து அவர்களுக்கு எந்த நலனையும் நாடாது, மார்க்கம் மற்றும் உலகியல் உரிமைகளை பால்படுத்தியவரே இவ்வாறான கடுமையான தண்டணைக்கு தகுதியானவராக மாறுகிறார்.

فوائد الحديث

இந்த எச்சரிக்கையானது குறிப்பாக நாட்டின் தலைவர் (கலீபா) மற்றும் அவரின் அரச பிரதிநிதிகள் போன்றோரை மாத்திரம் குறிக்காது. மாறாக யாரெல்லாம் குடிமக்களின் விவகாரங்களில் பொறுப்புக்கூறக்கூடிய பதவி நிலைகளில் உள்ளனரோ அவர்கள் அனைவரையும் இது குறிக்கும்.

எனவே முஸ்லிம் விவகாரங்களில் பொறுப்பொன்றை ஏற்ற யாவரும் அவர்களுக்கு நலன் நாடி, அவர்களின் அமானிதங்களை நிறைவேற்றுவதில் அயராது பாடுபட்டு அவர்களுக்கு துரோகம் மற்றும் மோசடி செய்வதிலிருந்து எச்சரிக்கையாக இருப்பதும் அவசியமாகும்.

பொதுவான அல்லது குறிப்பான அல்லது, பெரிய அல்லது சிறிய நிர்வாகத்தை பொறுப்பேற்பதில் மிகப்பெரும் வகை கூறுதல் இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டப்படடுள்ளது.

التصنيفات

மார்க்க ரீதியான நிர்வாகம்