(இஸ்லாமிய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று விடுபவன்…

(இஸ்லாமிய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று விடுபவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான். அந்த நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் கூறினார்கள் : "(இஸ்லாமிய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று விடுபவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான். அந்த நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

ஒப்பந்தப் பிரஜை ஒருவரை தகுந்த காரணமின்றிக் கொன்றவனை அல்லாஹ் சுவனத்தில் நுழைய இடமளிக்க மாட்டான், அதன் நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும், அதையும் நுகர மாட்டான் என்பதை இந்நபிமொழி அறிவிக்கின்றது. ஒப்பந்தப் பிரஜை என்பவர் இஸ்லாமிய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து, அல்லது வரிப்பணம் செலுத்தி அதன் கீழ் வாழ்ந்து வரக்கூடிய மாற்றுமதத்தவராகும். இந்த செய்தி அவ்வாறானோர் சுவனத்திலிருந்து எவ்வளவு தொலைவில் இருப்பார்கள் என்பதையும் அறிவிக்கின்றது. மாற்றுமதத்தவரில் ஒப்பந்தப் பிரஜைகள், வரிப்பணம் செலுத்துவோரின் உயிரைப் பாதுகாப்பதில் இஸ்லாம் காட்டும் அக்கறை, மற்றும் உரிமையின்றி அவர்களைக் கொல்வது பெரும்பாவங்களில் ஒன்று என்பவற்றை இந்நபிமொழி உணர்த்துகின்றது.

فوائد الحديث

ஒப்பந்தப் பிரஜைகளைக் கொல்வது ஹராமாகும், அது பெரும்பாவங்களில் ஒன்றாகும். ஏனெனில் அச்செயல் அவன் சுவனம் நுழையும் பாக்கியத்தை இழக்கச் செய்கின்றது என்பது இந்நபிமொழியிலிருந்து புரிய முடிகின்றது.

"குற்றமின்றி", "உரிமையின்றி" கொல்தல் என சில அறிவிப்புக்களில் வந்துள்ளது. மார்க்க சட்டவிதிகளால் இந்த வரையறை அறியப்பட்ட ஒன்றாகும்.

உடன்படிக்கையை நிறைவேற்றுவது கடமையாகும்.

சுவனத்திற்கு நறுமணம் உண்டு.

சுவனத்தின் நறுமணம் தொலைதூரத்திலிருந்து வீசக்கூடியது.

التصنيفات

இஸ்லாமிய ஆட்சியில் வாழும் முஸ்லிமல்லாத நாட்டின் குடிமக்கள்