நீங்கள் எங்கள் (மாபெரும்} தலைவர்"என்று கூறினோம், அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வே மாபெரும் தலைவன் ஆவான். அப்போது…

நீங்கள் எங்கள் (மாபெரும்} தலைவர்"என்று கூறினோம், அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வே மாபெரும் தலைவன் ஆவான். அப்போது நாம் நீங்கள் எங்களில் அந்தஸ்த்தால் உயர்ந்தவராகவும் அள்ளி வழங்கும் வள்ளலாகவும் இருக்கிறீர்கள் என்று கூறினோம். அதற்கு நபியவர்கள் நீங்கள் சொல்வதை சொல்லுங்கள் அல்லது சிலதை கூறுங்கள் உங்களை ஷைத்தான் எல்லை மீறிப்புகழ்வதற்கு இட்டுச் செல்லாதிருக்கட்டும்.' எனக் குறிப்பிட்டார்கள்

அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸிஹ்ஹீர் رضى الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்; பனூஆமிர் கூட்டாத்தாருடன் நபியவர்களிடம் நான் சென்றேன். அப்போது நாம் நபியவர்களைப் பார்த்து" நீங்கள் எங்கள் (மாபெரும்} தலைவர்"என்று கூறினோம், அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வே மாபெரும் தலைவன் ஆவான். அப்போது நாம் நீங்கள் எங்களில் அந்தஸ்த்தால் உயர்ந்தவராகவும் அள்ளி வழங்கும் வள்ளலாகவும் இருக்கிறீர்கள் என்று கூறினோம். அதற்கு நபியவர்கள் நீங்கள் சொல்வதை சொல்லுங்கள் அல்லது சிலதை கூறுங்கள் உங்களை ஷைத்தான் எல்லை மீறிப்புகழ்வதற்கு இட்டுச் செல்லாதிருக்கட்டும்.' எனக் குறிப்பிட்டார்கள்.

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

ஒரு குழு நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அவர்களை அணுகியதும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பாத சில வார்த்தைகளால் அவர்களைப் புகழ்ந்து கூறினார்கள். அவர்கள் நபியவர்களைப் பார்த்து: 'நீங்கள் எங்கள் எஜமானர்.' என்று கூறினார்கள் அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்: ''எஜமானன் அல்லாஹ்', எனக் கூறினார்கள். ஏனெனில் தனது படைப்பின் மீது முழு இறையாண்மை அவனுக்கே உள்ளது, ஆகையினால் அவர்கள் அவனுடைய அடிமைகளாவர். அவர்கள் மேலும் சொன்னார்கள்: நீங்கள் 'எங்களில் சிறந்தவர்' அதாவது பதவி, மரியாதை மற்றும் தகுதி ஆகியவற்றில் எங்களில் உயர்ந்தவர். அதாவது நீங்கள் எங்களில் ' தாராள மனப்பான்மை கொண்டவர் ' தாராளமாக கொடுப்பவர், உயர்ந்தவர் மற்றும் எங்களில் மிகவும் மதிப்புமிக்கவர். பின் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஷிர்க் (பல தெய்வ வழிபாடு) மற்றும் அதற்கு வழிவகுக்கும் காரணிகளான மிகைப்படுத்தல் மற்றும் எல்லை மீறல் போன்ற ஷைத்தானின் சூழ்சிகளுக்கு ஆட்படாமல் இருக்க, வலிந்து வார்த்தைகளைக் கூறாது சாதாரணமாக வார்த்தைகளைக் கூறி புகழுமாறு வழிகாட்டினார்கள்.

فوائد الحديث

நபித்தோழர்களின் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்கள் பற்றி காணப்பட்ட உயர் மதிப்பையும் மரியாதையையும் இந்த ஹதீஸ் எடுத்தியம்புகின்றமை.

இந்த ஹதீஸ் வழிந்து வார்த்தைகளைக் கூறுவதை தடுப்பதோடு வார்த்தைகளில் நடுநிலமையைக் கைக்கொள்ளுமாறு குறிப்பிடுதல்.

தவ்ஹீதுக்கு (ஏகத்துவத்திற்கு) பங்கம் ஏற்படுத்தக்கூடிய வார்த்தைகள் மற்றும் செயல்களிலிருந்து அதனைப் பாதுகாத்தல்.

புகழ்வதில் எல்லைமீறிச்செல்வதை தடைசெய்திருத்தல். ஏனெனில் அது ஷைத்தானின் நுழைவாயில்களில் ஒன்றாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகளின் தலைவர் ஆவார், ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருப்பது பணிவின் அடிப்டையிலும், அவர்களின் மீது எல்லை மீறி செல்வதில் அச்சம் இருப்பதினாலும் ஆகும்.

التصنيفات

நம் தூதர் முஹம்மத் (ஸல்)