'என்னைப் பற்றி ஒரு வார்த்தையேனும் எத்தி வையுங்கள். பனூ இஸ்ராயீல்கள் (இஸ்ரவேல் சந்ததியினர்) பற்றி கூறுங்கள்…

'என்னைப் பற்றி ஒரு வார்த்தையேனும் எத்தி வையுங்கள். பனூ இஸ்ராயீல்கள் (இஸ்ரவேல் சந்ததியினர்) பற்றி கூறுங்கள் குற்றமில்லை. என் மீது வேண்டுமென்றே யாரேனும் பொய்யுரைத்தால் அவர் நரகத்தை தனக்குரிய தங்குமிடமாக எடுத்துக் கொள்ளட்டும்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் : 'என்னைப் பற்றி ஒரு வார்த்தையேனும் எத்தி வையுங்கள். பனூ இஸ்ராயீல்கள் (இஸ்ரவேல் சந்ததியினர்) பற்றி கூறுங்கள் குற்றமில்லை. என் மீது வேண்டுமென்றே யாரேனும் பொய்யுரைத்தால் அவர் நரகத்தை தனக்குரிய தங்குமிடமாக எடுத்துக் கொள்ளட்டும்'.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

அல்குர்ஆன் அஸ்ஸுன்னா ஆகியவற்றிலிருந்து தன்னிடம் பெற்றுக் கொண்ட அறிவை மனிதர்களுக்கு எத்திவைக்குமாறு நபியவர்கள் கட்டளை பிரப்பிக்கிறார்கள். பிறருக்கு எத்திவைப்பவரும், அழைப்பவரும் குறித்த விடயத்தை நன்கு தெரிந்தவராகவும், விளங்கியவராகவும் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு, அறிவிக்கும் விடயம் அல்குர்ஆன் அல்லது ஹதீஸின் ஒரு வசனம் போன்று சிறியதாக இருந்தாலும் சரியே. இஸ்ரவேலர்களுக்கு நிகழ்ந்தவற்றை, அவை எமது ஷரீஅத்துடன் முரண்படாத வகையில் இருப்பின் அவற்றை அறிவிப்பதில் எவ்விதக் குற்றமுமில்லை என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். பின்னர் அவர்களின் மீது பொய்யுரைப்பதை எச்சரித்துள்ளதோடு, அவ்வாறு வேண்டுமென்று மனமுரண்டாக பொய்யுரைப்பவர் நரகத்தில் தனக்கென ஒரு தங்குமிடத்தை எடுத்துக் கொள்ளட்டும் என்றும் குறிப்பிட்டார்கள்.

فوائد الحديث

அல்லாஹ்வின் மார்க்கத்தை எத்திவைப்பதற்கு ஆர்வமூட்டப்பட்டிருத்தல், ஒரு மனிதன் மார்க்க விடயங்களில் தான் மனனமிட்டு, விளங்கிய விடயத்தை அது குறைவாக இருந்தாலும் எத்திவைக்க வேண்டும்.

அல்லாஹ்வை முறையாக வணங்குவதற்கும், உரிய முறையில் -சரியான வடிவத்தில்- மார்க்கத்தை எத்திவைக்கவும் மார்க்க அறிவை கற்பது கடமையாகும்.

நபியவர்களின் கடுமையான கண்டனத்திற்கு உட்படாது எச்சரிக்கையாக இருக்க, எந்த ஹதீஸாக இருந்தாலும் அதனை எத்திவைக்க முன் அல்லது பிரசுரிக்க(பரப்ப) முன் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்வது கட்டாயமாகும்.

குறிப்பாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் பொய் கூறுதல் என்ற பாவத்தில் விழாதிருக்க, வார்த்தையில் உண்மை பேசுமாறும், நபியவர்களின் ஹதீஸில் பொய்யுரைக்கும் விடயத்தல் எச்சரிக்கையாக இருக்க வேணடும் எனவும் தூண்டப்பட்டிருத்தல்.

التصنيفات

சுன்னாவின் முக்கியத்துவமும் மதிப்பும், அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதன் சட்டம்