அஸர் தொழுகையை விட்டவனின் நற்செயல்கள் அழிந்து விடும்.

அஸர் தொழுகையை விட்டவனின் நற்செயல்கள் அழிந்து விடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அஸர் தொழுகையை விட்டவனின் நற்செயல்கள் அழிந்து விடும்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

அஸர் தொழுகையை வேண்டுமென்றே விட்டவருக்குரிய தண்டனை இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ளது. பகல் நேர வேலைப்பளுவின் அசதியினால் பிற்போட வாய்ப்புள்ள தொழுகையாக அஸர் இருப்பதனால் அதனைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் "தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்" (பகரா : 238) என்ற வசனத்தில் பேணி வருமாறு ஏவப்பட்டுள்ள மத்திய தொழுகை இதுவென்பதால் ஏனைய தொழுகைகள் தவறுவதை விட இது பாரதூரமானதாகும். இதனால் ஏற்படும் விளைவு அதனை விட்டவரின் நற்செயல்களின் நன்மைகள் ரத்தாவதன் மூலம் அழிந்து விடும். அஸர் தொழுகையை விட அனுமதியுண்டு வாதிட்டலோ, அது கடமை என்பதை மறுத்தாலோ நற்செயல்கள் அழிந்து விடும் என்ற மற்றுமொரு கருத்தும் உள்ளது. இக்கருத்தின் படி நற்செயல்கள் அழிவதென்பது இறைநிராகரிப்பையே குறிக்கின்றது. இந்நபிமொழியை ஆதாரமாகக் கொண்டு அஸர் தொழுகையை விடுவது இறைநிராகரிப்பு என சில அறிஞர்கள் அபிப்பிராயப்பட்டுள்ளனர். ஏனெனில் அதன் மூலமே நற்செயல்கள் அழிகின்றன. இது சட்டத்தை கடுமையாக்க கூறப்பட்டதெனவும் சிலர் கூறுகின்றனர். அத்தொழுகையை விட்டால் அவருடைய நற்செயல்கள் அழிந்ததைப் போன்று ஆகிவிடுவார் என்பதே இதன் அர்த்தமாகும். இது அஸர் தொழுகைக்குள்ள பிரத்தியேகமான சிறப்பாகும். அது புனிதமானதென்பதால் அதனை விட்டவருடைய நற்செயல்கள் அழிந்து விடுகின்றன.

فوائد الحديث

அஸர் தொழுகையை உரிய நேரத்தில் தொழுவதை ஊக்குவித்தல்.

தொழுகையை விடுவது ஹராமாகும், குறிப்பாக அஸர்த் தொழுகை.

வேண்டுமென்றே அஸர்த்தொழுகையை விட்டவருடைய நற்செயல்களின் கூலி ரத்தாகிவிடும். மற்றுமொரு ஆதாரபூர்வமான அறிவிப்பில் "வேண்டுமென்றே" என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதாலே இந்த வரையறை இடப்பட்டுள்ளது.

التصنيفات

தொழுகையின் அவசியமும் அதனை விட்டுவிடுபவருக்கான சட்டமும், தொழுகையின் அவசியமும் அதனை விட்டுவிடுபவருக்கான சட்டமும்