'எழுதவும்; என் ஆன்மா யாருடைய கையில் இருக்கிறதோ, இந்த வாயின் மூலம் உண்மையைத் தவிர வேறு எதுவும் வெளிவருவதில்லை!

'எழுதவும்; என் ஆன்மா யாருடைய கையில் இருக்கிறதோ, இந்த வாயின் மூலம் உண்மையைத் தவிர வேறு எதுவும் வெளிவருவதில்லை!

அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து கேட்ட அனைத்தையும் மனப்பாடம் செய்வதற்காக எழுதிக்கொள்பவனாக இருந்தேன். குரைஷிகள் என்னைத் தடை செய்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அவர்களிடமிருந்து நீங்கள் கேட்கும் அனைத்தையும் எழுதுகிறீர்களா? அல்லாஹ்வின் தூதர் ஒரு மனிதர் அவர் கோபத்திலும், சாதாரன நிலையிலும் பேசுகிறாரே என்று என்னிடம் அவர்கள் கூற, நான் எழுதுவதை நிறுத்திவிட்டு, அதைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல் அவர்களிடம் கூறினேன். பின்னர், அவர் தனது வாயில் விரலைக் காட்டி கூறினார்: 'எழுதவும்; என் ஆன்மா யாருடைய கையில் இருக்கிறதோ, இந்த வாயின் மூலம் உண்மையைத் தவிர வேறு எதுவும் வெளிவருவதில்லை!.

[ஸஹீஹானது-சரியானது] [இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்]

الشرح

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து கேட்பவற்றை எழுத்து மூலம் பாதுகாப்பதற்காக பதிவு செய்துகொள்பவனாக இருந்தேன். அப்போது குறைஷியர்களில் சிலர் என்னை எழுத வேண்டாம் எனத்தடுத்துவிட்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சாதாரண நிலையிலும் கோபத்திலும் பேசும் ஒரு மனிதராவர், அவர்கள் சில வேளை தவறிழைக்கக் கூடும் எனக் கூற நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டேன். எனவே அவர்கள் கூறியதை நபி எஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கூறினேன். அதற்கு நபியவர்கள் தனது வாயை பெரும் விரலால் சுட்டிக்காட்டி எழுதுவீராக எனக் கூறிவிட்டு எனது ஆன்மா யாரின் கைவசம் உள்ளதோ அவனின் மீது சத்தியமாக கோபம் மற்றும் எல்லா நிலைகளிலும் இதிலிருந்து வெளிப்படும் அனைத்தும் சத்தியமாகும் எனக் கூறினார்கள். அல்லாஹ் தனது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறான்: 'அவர் மனோ இச்சைப்படி எதனையும் பேசுவதில்லை. அது அவருக்கு அறிவிக்கப்படும் வஹியைத் தவிர வேறுஎதுவுமில்லை' ( அந்நஜ்ம்: 3-4)

فوائد الحديث

சாதாரண நிலையிலும் கோபத்தின் போதும் தனது இரட்சகன் சார்பாக எத்திவைக்கப்படுபவை அனைத்திலும் நபியவர்கள் தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் என்பதை இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது.

ஸுன்னாவைப் பாதுகாத்தல் அதனை எத்திவைத்தல் போன்ற விடயங்களில் ஸஹாபாக்களுக்கிருந்த அதீத ஆர்வத்தை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது.

ஒரு விடயத்தை திட்டப்படுத்துவது போன்ற ஏதாவது ஒரு நலனைக் கருத்திற்கொண்டு சத்தியம் செய்வது அனுமதிக்கப்பட்ட விடயமாகும்.

அறிவைப் பதிவு செய்தல் அறிவு பாதுகாக்கப்படுவதற்கான மிகப் பிரதான வழிமுறைகளுள் ஒன்றாகும்.

التصنيفات

சுன்னாவின் முக்கியத்துவமும் மதிப்பும், நபிமொழியைப் பதிவு செய்தல், நம் தூதர் முஹம்மத் (ஸல்)