'திருடர்களில் மிகவும் மோசமானவர் அவருடைய தொழுகையில் திருடுபவராவார்' அதற்கு நான்; 'அவன் எப்படி தொழுகையை…

'திருடர்களில் மிகவும் மோசமானவர் அவருடைய தொழுகையில் திருடுபவராவார்' அதற்கு நான்; 'அவன் எப்படி தொழுகையை திருடுகிறான்?' எனக் கேட்டேன் அதற்கு அவர்கள்: 'அவர் அதன் ருகூவையோ அல்லது ஸுஜூதையோ சரியாகச் செய்வதில்லை' என்று கூறினார்கள்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'திருடர்களில் மிகவும் மோசமானவர் அவருடைய தொழுகையில் திருடுபவராவார்' அதற்கு நான்; 'அவன் எப்படி தொழுகையை திருடுகிறான்?' எனக் கேட்டேன் அதற்கு அவர்கள்: 'அவர் அதன் ருகூவையோ அல்லது ஸுஜூதையோ சரியாகச் செய்வதில்லை' என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை இப்னு ஹிப்பான் அறிவித்தார்]

الشرح

மனிதர்களில் மிகக்கேவளமானவன் தொழுகையில் களவு செய்பவர் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். தொழுகைத் திருடனுக்கு மாற்றமாக பிறரின் செல்வத்தை திருடுபவன் சில வேளை அதனால் பயனடைவான், ஆனால் தொழுகையை திருடுபவன் தனக்கு கிடைக்க வேண்டிய கூலி மற்றும் வெகுமதியை அவனாகவே இழந்து கொள்கிறான். இதனால்தான் ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவன் தனது தொழுகையை திருடுவது எப்படி என வினவ அதற்கு 'தொழுகையின் ருகூஉ மற்றும் ஸுஜூதை முறையாக செய்யாமலிருப்பது என பதிலளித்தார்கள். அதாவது ருகூஉ மற்றும் ஸுஜூதை மிகவும் விரைவாக நிறைவேற்றுவதன் மூலம் அவற்றை உரிய முறையில் நிறைவேற்றாததை இது குறிக்கிறது.

فوائد الحديث

தொழுகையை உரிமுறையில் சிறப்பாக செய்வதையும், அதன் ருகுன்களை நிதானமாகவும் பணிவுடனும் நிறைவேற்றுவதன் அவசியத்தையும் இந்த ஹதீஸ் சுட்டிக் காட்டியுள்ளமை.

ருகூவையும், ஸஜூதையும் சரியாகச் செய்யாத ஒருவரைத் திருடன் என இந்த ஹதீஸ் விவரிக்கிறது. எனவே, இந்த நடத்தையிலிருந்து நம்மைத் தவிர்த்துக்கொள்ள வலியுறுத்துவதோடு தொழுகையில் இவ்வாறான செயற்பாடு ஹராம் -தடைசெய்ப்பட்டுள்ளமையும்- உணர்த்தி நிற்கிறது.

தொழுகையில் ருகூஃ மற்றும் ஸுஜூதை முழுமையாக நிறைவேற்றுவதுடன்; அதை முறையாக நிறைவேற்றுவதும் வாஜிபாகும்.

التصنيفات

தொழுகையின் தூண்கள், தொழும் முறை, தொழுவோர் விடும் தவறுகளட