பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன்…

பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) கூறுகின்றார்கள் :"பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

"பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்" அதாவது உறவுடன் சேர்ந்து நடக்கும் விடயத்திலும், பந்துக்களுக்கு உதவி செய்யும் விடயத்திலும் அவர்களிடம் பிரதி உபகாரத்தை எதிர்பார்க்கிறவன், பூரணமான மனிதன் அல்ல.எனினும் உறவுகள் அவனைத் துண்டித்துக் கொண்டாலும், அவர்கள் அவனுக்கு தீங்கிழைத்தாலும் பதிலுக்கு அவர்களுக்கு தீங்கிழைக்காது அவர்களுடன் சேர்ந்து நடக்கிறவனே உண்மையில் உறவுடன் சேர்ந்து நடக்கும் பூரண மனிதனாவான்.எனவே பந்துக்களும், அயலவரும், தோழர்களும், ஏனையோரும் அவனுக்கு தீங்கிழைத்தாலும், அதனை மனிதன் பொறுத்துக் கொள்வது அவசியமாகும். அப்பொழுது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவனிடம் ஒரு உதவியாளர் இருந்து கொண்டே இருப்பார். எனவே இதன் மூலம் அவர் இலாபமடைய, மற்றவர்கள் நஷ்டமடைவர். மேலும் உறவுகளுக்கு பண உதவிகள் வழங்குதல், அவர்களின் தேவைகளுக்கு உதவுதல்,அவர்களின் நெறுக்கடிகளை நிவர்த்தி செய்தல், மலர்ந்த முகத்துடன் அவர்களை எதிர் கொள்ளல், அவர்களுக்காக பிரார்த்தனை செய்தல் போன்ற கருமங்களின் மூலமே உறவுகளை சேர்ந்து நடத்தல் ஏற்படுகின்றது. பொதுவாகக் கூறுமிடத்து தங்களின் சக்திக்கு உட்பட்ட வரை உறவினருக்குத் தம்மால் முடியுமான எல்லா நற்கருமங்களைச் செய்தும், தீமைகளைத் தவிர்த்தும் கொள்ள வேண்டும். ஏனெனில் உறவுகளுடன் சேர்ந்து நடக்க வேண்டுமென்பதை இஸ்லாம் கண்டிப்பாக எடுத்துரைக்கிறது. எனினும் ஒருவன் தனது உறவை சரியான வழிக்குக் கொண்டு வருவதற்காகவும், மார்க்கத்திற்கு முரணான காரியஙு்களில் இருந்து அவர்களைத் தடுப்தற்காகவும் அல்லது அவன் தன் உறவுகள் மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் இருந்து வருகின்ற நிலையிலும் அவர்களுடன் சேர்ந்து நடப்பதானது அவனுக்கு ஆபத்தானது. அது தன்னையும், தனக்குக் கீழ் இருப்பவர்களையும் தொற்றிக் கொள்ளும் என்று அஞ்சும் பட்சத்தில், அவன் தன் உறவை விட்டு விலகி இருப்பது, தன் உறவினரை கண்டிப்பதற்காகவும்,அவர்கள் செய்யும் பிழையான காரியத்தை தடுப்பதற்காகவும், அவர்களை விட்டும் விலகியிருப்பது போன்றன உறவைத் துண்டிக்கும் விடயத்தைச் சாராது.

فوائد الحديث

உறவினர்களுடன் சேர்ந்து நடப்பதை ஊக்குவித்தல்.

அமல்களை அல்லாஹ்வுக்காக மாத்திரம் செய்தல் அவசியமாகும், அதன் பிரதிபலன் இவ்வுலகில் கிடைக்காவிட்டாலும் மறுமையில் அது நிரந்தரமான நலவாக இருக்கும்.

ஒரு முஸ்லிமைத் துன்புறுத்துவதால் அவன் துன்புறுத்தியவனுக்குச் செய்யும் நலவைத் துண்டிக்க முடியாது.

மார்க்க சட்டபூர்வமானதாகக் கணிக்கப்படும் உறவைச் சேர்ந்து நடப்பதானது உன்னுடன் உறவை முறித்துக் கொண்டவனுடன் சேர்ந்து நடத்தல், உனக்கு அநீதி இழைத்தவனை மன்னித்தல், உனக்குத் தர மறுத்தவனுக்குக் கொடுத்தல் என்பனவே தவிர, பதிலுக்கு பதில் சேர்ந்து நடப்பதல்ல.

பதிலுக்கு பதில் அமைப்பில் சேர்ந்து நடப்பது முழுமையான சேர்ந்து நடத்தலாக அமைய மாட்டாது என்பதை இந்நபிமொழி தெளிவுபடுத்துகின்றது. ஏனெனில் இது பரஸ்பரம் நலவுகளைப் பகிர்ந்து கொள்வதாகும். இதில் உறவினர்களும், உறவல்லாதோரும் சமனானவர்களே.

உறவினர்களுடன் பழகும் போது நோவினைக்குப் பதிலாக உபகாரம் செய்வது விரும்பத்தக்கதாகும்.

التصنيفات

முஸ்லிம் சமூகம்