இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்…

இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்போம்

உபாதா இப்னு அஸ்ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்போம் என்றும், எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளர்களிடம் நீங்கள் கண்டாலே தவிர அவர்களுடைய அதிகாரம் தொடர்பாகச் சண்டையிட மாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையே பேசுவோம் என்றும், அல்லாஹ்வின் விடயத்தில் பழிப்போரின் பழிச்சொல்லுக்கு அஞ்சமாட்டோம் என்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி அளித்தோம்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது தோழர்களிடத்தில், அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு இன்பத்திலும் துன்பத்திலும் -இலகுவான விடயத்திலும் சிரமமான விடயத்திலும், - வசதியான மற்றும் வறுமையான நிலைகளிலும், கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி பெற்றார்கள். அத்துடன் அவர்களின் ஆணைகள்; தமக்கு விருப்பமானதாக அல்லது விருப்பமில்லததாக இருப்பினும் சரியே, அதே போன்று குடிமக்களுக்கு சேரவேண்டிய பொது நிதிகள், பதவிகள் மற்றும் இவைகள் அல்லாத விடயங்களில் தமக்கு முன்னுரிமையளித்து அவற்றை அவர்கள் அனுபவித்தாலும் அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி, போராட்டாம் செய்யாது நியாயமான முறையில் அவர்களின் ஆணைகளை செவியேற்று கட்டுப்பட்டு நடப்பது கடமையாகும். ஏனெனில் அவர்களின் இந்த அநியாயத்தை விடவும் இந்தப் போராட்டம், கிளர்ச்சி அதிக தீங்குகளையும், பாரிய குழப்பங்களையும், முஸ்லிம்களுக்கு மத்தியில் தோற்றுவிக்கின்றது. அதே போன்று அவர்கள் குறித்து அல்லாஹ்வுக்கு மாத்திரம் பயந்தவர்களாக இதயசுத்தியுடன், எவரது பழிச்சொல்லுக்கும் பயப்படாது உண்மையை கூறுவதிலும் தயங்கக்கூடாது.

فوائد الحديث

ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கட்டுப்படுவதன் விளைவு முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினை கலைந்து ஒற்றுமை ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.

அல்லாஹ்வுக்கு முரணில்லாத விடயங்களில் இன்பத்திலும் துன்பத்திலும், விருப்பிலும் வெறுப்பிலும், அவர்கள் தமக்கென முன்னுரிமை அளித்து அனுபவிப்பதிலும் அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் செவிசாய்த்து கட்டுப்பட்டு நடப்பது கடமையாகும்.

நாம் எங்கிருந்த போதும் எவரின் பழிச்சொல்லுக்கும் பயப்படாது அல்லாஹ்விற்கு மாத்திரம் பயந்தவர்களாக சத்தியத்தை உரைப்பது கடமையாகும்.

التصنيفات

மார்க்க ரீதியான நிர்வாகம், நாட்டுத் தலைவருக்கெதிரான கிளர்ச்சி