((நீங்கள் மலம் கழிக்கச் சென்றால், கிப்லா (கஃபா) திசையை முன்னோக்கவும் வேண்டாம்; (அதன் திசையில்) முதுகைக் காட்டி…

((நீங்கள் மலம் கழிக்கச் சென்றால், கிப்லா (கஃபா) திசையை முன்னோக்கவும் வேண்டாம்; (அதன் திசையில்) முதுகைக் காட்டி அமரவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்

அபூ அய்யூபுல் அல்அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள் : ((நீங்கள் மலம் கழிக்கச் சென்றால், கிப்லா (கஃபா) திசையை முன்னோக்கவும் வேண்டாம்; (அதன் திசையில்) முதுகைக் காட்டி அமரவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள். இதை அறிவித்த அபூ அய்யூப் அல்அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றிருந்த போது, (அங்குள்ள) கழிப்பறைகள் கிப்லாவை முன்னோக்கி கட்டப்பட்டிருப்பதைக் கண்டோம். ஆகவே, நாங்கள் (கிப்லாவின் திசையிலிருந்து) விலகிக்கொண்டதோடு (அவ்வாறு கட்டியவர்களுக்காக) அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினோம் என்று சொன்னார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

சிறு நீர் அல்லது மலம் கழிக்க நாடுபவர் கிப்லாத் திசையையை முன்னோக்கி அல்லது பின்னோக்கி தனது தேவையை நிறைவேற்றுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடைசெய்தார்கள். மாறாக அவர் அத்திசையை விட்டு விலகி கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமர்ந்து தனது இயற்கைத்தேவையை நிறைவேற்றுமாறு குறிப்பிடுகிறார்கள். அதாவது இது மதீனா வாசிகளின் கிப்லாத் திசை உள்ளோர் இவ்வாறு செய்தல் வேண்டும். இவர்கள் அல்லாதோர் அவர்களின் நோக்கும் கிப்லாத் திசையை விட்டு விலகி மாற்றுத்திசையை நோக்கி அமர்தல் வேண்டும். தொடர்ந்தும், அபூஅய்யூப் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகையில் அவர்கள்; ஷாம் தேசத்திற்கு சென்றிருந்த போது அங்கே இயற்கைத்தேவையை நிறைவேற்றுவதற்கென தனியான கழிவறைகள் காணப்பட்டதாகவும் அவை கிப்லா திசைநோக்கி அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கிறார்கள். அவர்கள் அக்கழிவறைகளை பயன்படுத்தும் போது தங்களது உடலை கிப்லாத்திசையை விட்டு சற்று விலக்கி அமர்ந்தாகவும் அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரியதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

فوائد الحديث

கிப்லாத் திசையை நோக்கி அமர்ந்து இயற்கைத் தேவையை நிறைவேற்றுவது தடைசெய்யப்பட்டிருப்பதில் உள்ளடங்கியிருக்கும் நுட்பம் கஃபாவை புனிதப்படுத்தி அதற்கு கௌரவமளிப்பதாகும்.

கழிவறையிலிருந்து வெளியேறியதின் பின் இஸ்திஃபார் செய்தல்.

தடைசெய்யப்பட்ட விடயத்தை குறிப்பிட்டு அதற்கு நிகராக அனுமதிக்கப்பட்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளமை நபியவர்களின் அழகிய கற்பித்தல் முறையை எடுத்துக்காட்டுகின்றது.

التصنيفات

அசுத்தம் அகற்றல், இயற்கை தேவைகள் நிறைவேற்றுவதன் ஒழுங்குகள்