"அயலவரை எனக்கு வாரிசுக்காரராக ஆக்கி விடுவாரோ என நான் எண்ணுமளவிற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் இவர்களைப் பற்றி…

"அயலவரை எனக்கு வாரிசுக்காரராக ஆக்கி விடுவாரோ என நான் எண்ணுமளவிற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் இவர்களைப் பற்றி எனக்கு உபதேசித்துக் கொண்டே இருந்தார்கள்".

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) , மற்றும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள்: "அயலவரை எனக்கு வாரிசுக்காரராக ஆக்கி விடுவாரோ என நான் எண்ணுமளவிற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் இவர்களைப் பற்றி எனக்கு உபதேசித்துக் கொண்டே இருந்தார்கள்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

அயலவருக்கு சொத்தில் பங்கு கொடுக்கும் படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு வஹீ கொண்டு வருவார்கள் என நான் நினைக்குமளவு அயலவர்கள் விடயத்தில் கரிசனை எடுக்குமாறு அவர்கள் எனக்கு உபதேசித்துக் கொண்டே இருப்பார்கள் என நபியவர்கள் கூறுகின்றார்கள்.

فوائد الحديث

அயலவர்களின் உரிமையின் மகத்துவம் மற்றும் அதை கணக்கில் எடுத்துக்கொள்வதன் அவசியம் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

உபதேசம் செய்து அவர்களின் உரிமையை வலியுறுத்துவதானது அவர்களை மதித்து, நேசித்து, உபகாரம் புரிதல், ஆபத்துக்களைத் தடுத்தல், நோயுறும் போது நலம் விசாரத்தல், மகிழ்வுறும் விடயங்களின் போது வாழ்த்துதல், துன்பங்களின் போது ஆறுதல் கூறுதல் போன்றவற்றின் அவசியத்தை உணர்த்துகின்றது.

التصنيفات

உடன்படிக்கையும் பாதுகாப்பு வழங்குவதன் சட்டங்கள், உடன்படிக்கையும் பாதுகாப்பு வழங்குவதன் சட்டங்கள்