யார் எந்த சமூகத்திற்கு ஒப்பாக நடப்பாரோ அவர் அச்சமூகத்தைச் சேர்ந்தவராவர்

யார் எந்த சமூகத்திற்கு ஒப்பாக நடப்பாரோ அவர் அச்சமூகத்தைச் சேர்ந்தவராவர்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா கூறினார்கள் : யார் எந்த சமூகத்திற்கு ஒப்பாக நடப்பாரோ அவர் அச்சமூகத்தைச் சேர்ந்தவராவர்

[ஹஸனானது-சிறந்தது]

الشرح

யார் ஒருவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கே உரிய தனித்துவமான நம்பிக்கைள் அல்லது வணக்க வழிபாடுகள் அல்லது வழக்காறுகள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பின்பற்றிச் செய்வதன் மூலம் அவர்களில் உள்ள இறைநிராகரிப்பாளர்கள் அல்லது மோசமான தீய விடயங்களில் ஈடுபடுவோர் அல்லது அந்த சமூகத்தில் உள்ள நல்லோர்களுக்கு-ஆன்மீகவாதிகளுக்கு- ஒப்பாக நடந்து கொள்கின்றாறோ அவரும் அவர்களைச் சார்ந்தோரே என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். ஏனெனில் புறத்தோற்றத்தில் காபிர்களுக்கு ஒப்பாக நடத்தல் உள்ரங்கத்தில் ஒப்பாக நடக்க வழிவகுத்துவிடும். ஒரு சமூகத்துக்கு ஒப்பாக நடத்தல் என்பது அந்த சமூகத்தின் மீதுள்ள கவர்ச்சியின் விளைவாக ஏற்படுவதாகும். இது அவர்களை நேசம் கொள்வதற்கும், அவர்களை கண்ணியப்படுத்து வதற்கும், அவர்களை சார்ந்து வாழ்வதற்கும் சில வேளை வழிவகுத்துவிடுவதோடு, உள்ரங்கத்திலும் வணக்கத்திலும் அவர்களுக்கு ஒப்பாக நடப்பதற்கு இட்டுச்சென்று விடுகிறது. அல்லாஹ் எம்மனைவரையும் பாதுகாப்பானாக!

فوائد الحديث

காபிர்கள் மற்றும் நாகரிமற்ற மோசமான நடத்தையுடையோருக்கு ஒப்பாக இருப்பதை விட்டும் எச்சரித்திருத்தல்.

நல்லோருக்கு –சான்றோருக்கு- ஒப்பாக நடப்பதற்கும் அவர்களை பின்பற்றி நடக்கவும் ஆர்வமூடட்டப்பட்டிருத்தல்.

புறத்தோற்றத்தில் ஒப்ப நடத்தல் உள்ரங்கத்தில் நேசம் கொள்ள வழிவகுத்துவிடும்.

ஓப்பாகுதலின் வகைக்கேட்பவே ஒருவன் தீமையையும் அதற்கான தண்டனையையும் அடைந்து கொள்கிறான்.

காபிர்களுடைய மத விவகாரங்கள், பிரத்தியேகமான வழக்காறுகள் போன்றவற்றில் அவர்களுக்கு ஒப்பாவது தடுக்கப்பட்டிருத்தல். ஆனால் கைத்தொழில்களை கற்றுக்கொள்ளல் போன்ற மதத்துடன் நேரடித் தொடர்பில்லாத விடயங்களில் இத்தடை உள்ளடங்கமாட்டாது.

التصنيفات

தடைசெய்யப்பட்ட உடன்படுதல்