'தீங்கிழைக்கவும் கூடாது. தீங்கிற்குப் பழி வாங்கவும் கூடாது. யார் பிறருக்கு தீங்கிழைக்கிறானோ அவனுக்கு அல்லாஹ்…

'தீங்கிழைக்கவும் கூடாது. தீங்கிற்குப் பழி வாங்கவும் கூடாது. யார் பிறருக்கு தீங்கிழைக்கிறானோ அவனுக்கு அல்லாஹ் மிகப்பெரும் தண்டனையை வழங்குவான். யார் எவ்வித நியாயமுமின்றி பிறறை சிரமப்படுத்துகிறானோ அவனுக்கு அல்லாஹ் சிரமத்தை அளிக்கிறான் '

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'தீங்கிழைக்கவும் கூடாது. தீங்கிற்குப் பழி வாங்கவும் கூடாது. யார் பிறருக்கு தீங்கிழைக்கிறானோ அவனுக்கு அல்லாஹ் மிகப்பெரும் தண்டனையை வழங்குவான். யார் எவ்வித நியாயமுமின்றி பிறறை சிரமப்படுத்துகிறானோ அவனுக்கு அல்லாஹ் சிரமத்தை அளிக்கிறான் '.

[அதன் ஆதாரங்களின் பிரகாரம் ஸஹீஹானது-சரியானது] [இதனை அத்தாரகுத்தனீ பதிவு செய்துள்ளார்]

الشرح

தனக்கோ பிறருக்கோ ஏற்படுகின்ற எல்லா வகையான தீங்குகளையும் அதன் வெளிப்பாடுகளையும் தடுப்பது கடமையாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.தனக்கோ பிறருக்கோ தீங்கை ஏற்படுத்துவதும் கூடாது. அத்துடன் தீங்கை இன்னொரு தீங்கினால் எதிர்கொள்வதும் கூடாது. காரணம் தீங்கிழைத்தல் என்பது அதே மாதிரியான ஒன்றினால் நீங்கிவிடாது. ஆனால் அத்துமீறாது பலிக்குப்பலி தண்டனை வழங்குதல் அனுமதிக்கப்பட்டதாகும். மக்களுக்கு தீங்கை ஏற்படுத்துவதினால் ஏற்படும் தீங்கிற்கான எச்சரிக்கையையும், மக்களுக்கு சிரமத்தை –கஷ்டத்தை- ஏற்படுத்துபவருக்கு கிடைக்கின்ற சிரமத்தையும் பற்றிய எச்சரிக்கையையும் இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவு படுத்தினார்கள் .

فوائد الحديث

செய்த தீங்கை விட அதிகமாகப் பழிதீர்ப்பது தடுக்கப்பட்டிருத்தல்.

தீங்கை ஏற்படுத்தக் கூடிய எதனையும் அல்லாஹ் தனது அடியார்களுக்கு கட்டளையிடவில்லை.

தனக்கோ,பிறருக்கோ வார்த்தை, செயல், செய்யாமல் விட்டுவிடுவதல் போன்றன மூலம் தீங்கிழைப்பது தடுக்கப்பட்டிருத்தல்.

செயலின் அளவுக்கேட்பவே கூலி கிடைக்கும். எனவே யார் தீங்கிழைத்துக் கொள்கிறாரோ அல்லாஹ் அவனை தண்டிக்கிறான். யார் சிரமப்படுத்திக்கொள்கிறாரோ அவருக்கு சிரமத்தைக் கொடுக்கிறான்.

'அல்லரரு யுஸாலு' (தீங்கு நீக்கப்படவேண்டும்) என்பது மார்க்க சட்டவாக்க விதிகளில் ஒன்றாகும், எனவே இஸ்லாமிய மார்க்கமானது தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பதை அங்கீகரிக்காது. அதனை வன்மையாக கண்டிக்கிறது.

التصنيفات

மார்க்க சட்டம் மற்றும் ஆதாரங்களை அணுகும் முறை சம்பந்தமான விதிமுறைகள்