என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர்…

என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்'' என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : “என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்'' என்று பதிலளித்தார்கள்”.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

நபி (ஸல்) அவர்களின் அழைப்பிற்கு பதிலளித்த தனது சமூகத்தவர் அனைவரும் சுவனம் நுழைவார்கள் என்ற நபியவர்களது நற்செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறியத் தருகின்றார்கள். பின்னர் மறுத்தவர்களைத் தவிர என ஒரு சாராருக்கு விதிவிலக்கு அளிக்கின்றார்கள். அதாவது சுவனத்திற்குச் செல்வதற்கான காரணமாகிய வழிப்படுதலை விட்டவர்களுக்கே அவ்வாறு விதிவிலக்கு அளிக்கின்றார்கள். ஒரு விடயத்தில் அத்தியவசியமான ஒரு காரணத்தை விட்டுவிடுவது அதனை மறுப்பதாகும், எனவே அவர்களுக்கு கடுமையாக்குவதற்காகவே விதிவிலக்கு கூறப்பட்டுள்ளது. அல்லது நபியவர்களின் அழைப்பிற்கு பதிலளித்தவர்கள் மாத்திரமல்லாது அவ்வழைப்பு கிடைக்கும் அனைத்து சமூகத்தவரையும் இங்கு நாடியிருக்கலாம். அவ்வாறு அழைப்புக் கிடைத்தும் ஏற்க மறுத்தவரே இங்கு விதிவிலக்கான சாரார் ஆகும். 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?' என்று கேட்டார்கள். நான் கொண்டு வந்த மார்க்கத்திற்குக் கட்டுப்பட்டு, எனக்கு வழிப்படுபவர் சுவனம் நுழைவார் என பதிலளித்தார்கள். மேலும் என்னை உண்மைப்படுத்தாமல், அல்லது தடுக்கப்பட்டதைச் செய்ததன் மூலம் எனக்கு மாறுசெய்தவனுக்கு அதன் விளைவாக தீய முடிவே உள்ளது. இதனடிப்படையில் மறுத்தவன் காபிராக இருந்தால் அறவே சுவனம் நுழைய மாட்டான், முஸ்லிமாக இருந்தால் நரகில் போடப்பட்டு தூய்மைப்படுத்தப் படாமல் சுவனம் நுழைய மாட்டான், சில வேளை அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்கும், அப்போது அனைத்து வித பாவங்களைச் செய்தாலும் அறவே தண்டிக்கப்பட மாட்டான்.

فوائد الحديث

அல்லாஹ் தனது அடியார்களுக்கு அருள் புரிந்து, சுவனத்தில் நுழைவிக்கவே அவர்களைப் படைத்துள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் தனது இறைவனிடத்திலிருந்து வரும் செய்தியை எத்திவைப்பவராவார்.

நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவன் அல்லாஹ்வின் அருளைத் தட்டியவராவான்.

அல்லாஹ் மற்றும் அவனது தூதரை விரோதிப்பது நரகிற்கு இட்டுச் செல்லும்.

ஒரு மனிதனின் ஈருலக வெற்றியும் நபிவழியைப் பின்பற்றுவதன் மூலமே உருவாகும்.

இந்தச் சமூகத்தில் அல்லாஹ்வுக்கு வழிப்படுவோருக்கு மிகப் பெரிய நற்செய்தி இந்நபிமொழியில் உள்ளது. அல்லாஹ்வுக்கு மாறு செய்து, தமது ஆசைகளைப் பின்பற்றியவர்களைத் தவிர ஏனைய அனைவரும் சுவனம் நுழைவார்கள் என்பதே அந்த நற்செய்தியாகும்.

التصنيفات

நம் தூதர் முஹம்மத் (ஸல்)