நபி (ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய…

நபி (ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை" என்று கூறி, வீட்டிலேயே தொழுதுகொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, "தொழுகை அறிவிப்பு சப்தம் உமக்குக் கேட்கிறதா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" (கேட்கிறது) என்றார். நபி (ஸல்) அவர்கள் "அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!" (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறினார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார் : நபி (ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை" என்று கூறி, வீட்டிலேயே தொழுதுகொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, "தொழுகை அறிவிப்பு சப்தம் உமக்குக் கேட்கிறதா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" (கேட்கிறது) என்றார். நபி (ஸல்) அவர்கள் "அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!" (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபி (ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் பார்வையற்றவன், ஐவேளைத் தொழுகைகளுக்கு என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து உதவக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை என்று ஜமாஅத் தொழுகையை விட அனுமதி கோரினார். அன்னார் அனுமதியளித்து விட்டு, அவர் செல்லும் போது மீண்டும் அழைத்து தொழுகைக்கான அதான் ஒலி கேட்கின்றதா என வினவ அவர் ஆம் என்றார். அப்படியானால் அந்த அழைப்பாளருக்கு பதிலளியும் என நபியவர்கள் கூறினார்கள்.

فوائد الحديث

கூட்டுத் தொழுகை கடமையானதாகும். கடமையான ஒன்றிலிருந்துதான் சலுகை வழங்கப்படுகின்றது. மேலும் பதிலளியும் எனும் வார்த்தை ஏவலாகும், ஏவல்களில் அடிப்படை கடமையையே குறிக்கின்றது.

பள்ளிக்கு அழைத்து வர யாருமில்லாவிடிலும் அதான் ஒலிக்கும் சப்தம் கேட்டால் பார்வையற்றவருக்கும் கூட்டுத் தொழுகை கடமையானதாகும்.

மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படாமலிருப்பதைப் பயிற்றுவித்தல், மார்க்கத் தீர்ப்பு வழங்க முன் கேள்வி கேட்பவரின் நிலை பற்றிய விவரம் கேட்பது அவசியமாகும்.

التصنيفات

கூட்டுத் தொழுகையின் சிறப்பும் சட்டங்களும், கூட்டுத் தொழுகையின் சிறப்பும் சட்டங்களும்