'ஒரு நபரின்; (தலைமையின்) கீழ் உங்கள் (அரசியல்) நிலை ஒன்றுபட்டிருக்கும்போது, உங்கள் ஐக்கியத்தை உடைக்கும் அல்லது…

'ஒரு நபரின்; (தலைமையின்) கீழ் உங்கள் (அரசியல்) நிலை ஒன்றுபட்டிருக்கும்போது, உங்கள் ஐக்கியத்தை உடைக்கும் அல்லது உங்கள் கட்டமைப்பைக் குலைக்கும் நோக்கத்தோடு உங்களிடம் யாரேனும் வந்தால் அவரைக் கொன்று விடுங்கள்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அர்ஃபஜா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒரு நபரின்; (தலைமையின்) கீழ் உங்கள் (அரசியல்) நிலை ஒன்றுபட்டிருக்கும்போது, உங்கள் ஐக்கியத்தை உடைக்கும் அல்லது உங்கள் கட்டமைப்பைக் குலைக்கும் நோக்கத்தோடு உங்களிடம் யாரேனும் வந்தால் அவரைக் கொன்று விடுங்கள்'.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

முஸ்லிம்கள் ஒரே தலைவரின்-ஆட்சியளரின் கீழ் ஒன்றுபட்ட பின் வேறு ஒருவன் ஆட்சிக்கெதிராக அதனை நீக்கவும், அல்லது முஸ்லிம் கூட்டமைப்பை பல்வேறு குழுக்களாக பிரிப்பதற்கு வந்தால் அவனது கெடுதியைத் தடுக்கவும், முஸ்லிம்களின் உயிரைப் பாதுகாக்கவும் அவனுக்கெதிராக போராடுவது கடமை என்பதை இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள்.

فوائد الحديث

பாவமல்லாத காரியங்களில் முஸ்லிம் தலைவருக்குக் கட்டுப்படுவது கடமை என்பதுடன், அவருக்கெதிராக போரிடுவது ஹராமாகும்.

முஸ்லிம் தலைவருக்கு எதிராகவும் அவரது கூட்டமைப்புக்கு எதிராகவும் யாராவது புரட்சி செய்தால் அவன் குடும்பம், அந்தஸ்த்தில் எந்த உயரத்தில் இருந்தாலும் அவனுடன் போராடுவது கடமையாகும்.

பிரிவினை, கருத்து வேறுபாடுகளைத் துறந்து, ஒற்றுமையாக இருக்கத் தூண்டுதல்.

التصنيفات

நாட்டுத் தலைவருக்கெதிரான கிளர்ச்சி