நேசமும் பகையும்

நேசமும் பகையும்

2- 'ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. (மேலும்) அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வது ஆகுமனதல்ல, இவர்களில் ஸலாமை கொண்டு முதலில் முந்திக்கொண்டவரே இவர்கள் இருவரில் சிறந்தவராவார்'

6- ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமைகள் ஆறு என நபியவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அவை எவை எனக் கேட்கப்பட்டது ? அதற்கு நபியவர்கள் : ஒரு முஸ்லிமைச் சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறுவீராக. அவர் உன்னை (விருந்துக்கு) அழைத்தால் அதற்கு பதிலளிப்பீராக. உன்னிடம் அறிவுரை கேட்டால் அவருக்கு அறிவுரை கூறுவீராக. அவர் தும்மி அல்ஹம்து லில்லாஹ் என்று கூறினால் அதற்கு யர்ஹமுகல்லாஹ் என்று கூறுவீராக. அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை சுகம் விசாரிக்கச் செல்வீராக. அவர் மரணித்துவிட்டால் அவரை அடக்கம் செய்வதற்காக பின்தொடர்ந்து செல்வாயாக என்று கூறினார்கள்