தூதர்கள் மீது விசுவாசம் கொள்ளல்

தூதர்கள் மீது விசுவாசம் கொள்ளல்

1- 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது'

4- நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான்

8- நீங்கள் எங்கள் (மாபெரும்} தலைவர்"என்று கூறினோம், அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வே மாபெரும் தலைவன் ஆவான். அப்போது நாம் நீங்கள் எங்களில் அந்தஸ்த்தால் உயர்ந்தவராகவும் அள்ளி வழங்கும் வள்ளலாகவும் இருக்கிறீர்கள் என்று கூறினோம். அதற்கு நபியவர்கள் நீங்கள் சொல்வதை சொல்லுங்கள் அல்லது சிலதை கூறுங்கள் உங்களை ஷைத்தான் எல்லை மீறிப்புகழ்வதற்கு இட்டுச் செல்லாதிருக்கட்டும்.' எனக் குறிப்பிட்டார்கள்