நபியவர்களின் வாழ்க்கையும் வரலாறும்

நபியவர்களின் வாழ்க்கையும் வரலாறும்

3- 'யா அல்லாஹ் !என் சமுதாயத்தின் விவகாரங்களில் ஒன்றை பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக! மேலும் என் சமூகத்தின் விவகாரங்களில் ஒன்றை ஒருவர் பொறுப்பேற்று அவர்களுடன் நலினமாக நடந்து கொள்கிறாரோ அவருடன் நலினமாக நடந்து கொள்வாயாக !

7- பெருந்துடக்குடன் இருந்த நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்போம். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை (துணி கட்டிக்கொள்ளுமாறு) பணிப்பார்கள். அவ்வாறே நான் கீழாடை அணிந்து கொள்வேன். அப்போது அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்