அழைப்புப் பணி

அழைப்புப் பணி

2- "உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார்; மறுத்தவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?" என்று கேட்டார்கள். "இல்லை. அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்)" என்று கூறினார்கள்.

10- 'உங்களில் எவர் ஒரு தீங்கைக் காண்கிறாரோ அவர் அதைத் தனது கரத்தால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையென்றால் அதை அவர் தனது நாவால் தடுக்கட்டும். அதையும் அவரால் செய்ய முடியவில்லையென்றால் அதை அவர் தனது மனதால் வெறுக்கட்டும். இதுதான் நம்பிக்கையின் (ஈமானின்) மிகவும் பலவீனமான- தாழ்ந்த- நிலையாகும்

13- "நிச்சயமாக மார்க்கம் இலகுவானது.மார்க்கம் அழிந்த போகாது.ஆனால் அது மிகைப்படுத்தப் பட்டாலேயன்றி.எனவே அதனை நடு நிலையாகவும்.மிகைப் படுத்தாமலும் செய்து வாருங்கள்.மேலும் மகிழ்ச்சியாக இருங்கள்.இன்னும் நல்லமல் மூலம் காலையிலும்,மாலையிலும்,இரவின் ஒரு பகுதியலும் உதவி தேடுங்கள்"என்றும்,"கருமத்தை நடு நிலையாகச் செய்யுங்கள்.மிகைப் படுத்தாதீர்கள்.காலையிலும்,மாலையிலும்,இன்னும் இரவின் ஒரு பகுதியிலும் அதனை நடு நிலையாகச் செய்யுங்கள்"என்றும் ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.