மார்க்க ஒழுங்குகள்

மார்க்க ஒழுங்குகள்

2- 'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றறால் நலம் விசாரித்தல், மரணித்தால் அவரின் இறுதி சடங்கில் பின்துயர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தல், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் பதிலுரைத்தல்'

3- (ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (எங்களிடம்), 'புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், 'இது குறித்து அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று பதிலளித்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்'

4- 'ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. (மேலும்) அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வது ஆகுமனதல்ல, இவர்களில் ஸலாமை கொண்டு முதலில் முந்திக்கொண்டவரே இவர்கள் இருவரில் சிறந்தவராவார்'

14- ஒரு மனிதர் விருப்பமான ஒரு கனவைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது. எனவே, அவர் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, அதை (மக்களுக்குக்) கூறவும். அவ்வாறல்லாமல் வெறுக்கும் ஏதாவதொன்றைக் கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வரும். அதன் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதுடன், யாரிடமும் அதைக் கூறாமலிருக்கட்டும். அப்போது, அது அவருக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தமாட்டாது

24- யார் சத்தியம் செய்யும்போது 'லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின்மீது சத்தியமாக!' என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படும் வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், ''வா சூது விளையாடுவோம்' என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்'

27- நான்கு பண்புகள் உள்ளன. அவை எவரிடத்தில் உள்ளதோ அவர்; மிகத்தெளிவான நயவஞ்கராவார். இந்தப் பண்புகளில் ஏதாவது ஒன்று ஒருவரிடம் காணப்படுமாயின் அவர் அதனை விட்டும் வரையில் அவரிடம் நயவஞ்சகத்தின் பண்புகளில் ஒன்று உள்ளது. அப்பண்புகளாவன. பேசினால் பொய்யுரைப்பான். ஒப்பந்தம் செய்தால் அதில் மோசடி செய்வான். வாக்களித்தால் மாறுசெய்வான். வழக்காடினால் -விவாதம் செய்தால்- நேர்மை தவறி நடந்து கொள்வான்”

46- ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமைகள் ஆறு என நபியவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அவை எவை எனக் கேட்கப்பட்டது ? அதற்கு நபியவர்கள் : ஒரு முஸ்லிமைச் சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறுவீராக. அவர் உன்னை (விருந்துக்கு) அழைத்தால் அதற்கு பதிலளிப்பீராக. உன்னிடம் அறிவுரை கேட்டால் அவருக்கு அறிவுரை கூறுவீராக. அவர் தும்மி அல்ஹம்து லில்லாஹ் என்று கூறினால் அதற்கு யர்ஹமுகல்லாஹ் என்று கூறுவீராக. அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை சுகம் விசாரிக்கச் செல்வீராக. அவர் மரணித்துவிட்டால் அவரை அடக்கம் செய்வதற்காக பின்தொடர்ந்து செல்வாயாக என்று கூறினார்கள்