பிரார்த்தனைகள் திக்ருகளின் சட்டங்கள்

பிரார்த்தனைகள் திக்ருகளின் சட்டங்கள்

3- 'ஸுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்), 'அல்ஹம்து லில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), 'லாஇலாஹ இல்லல்லாஹு' (உண்மையாக வணங்கப்படத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை), 'அல்லாஹ் அக்பர்' (அல்லாஹ் மிகப்பெரியவன்) ஆகிய நான்கு வாசகங்களும் அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்கு உரியவைகளாகும். இதில் எதனைக் கொண்டு நீங்கள் துவங்கினாலும் அதனால் உங்களுக்குப் எதுவித குற்றமுல்லை'

5- 'யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் தங்குவதற்காக இறங்கி பின்னர் 'அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்' (பொருள் : அல்லாஹ்வின் பூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்துப் படைப்புகளின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்) என்று கூறிப் பிரார்த்தித்தால், தங்கிய அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும் வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது'

6- 'ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்' (அல்லாஹ் தூயவன்; அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று நான் கூறுவதானது, சூரியன் உதயமாகும் இவ்வுலகைவிடவும் எனக்கு மிகவும் விருப்பமானதாகும்

8- 'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது

18- உணவை சாப்பிடும் ஒருவர் (அவர் சாப்பிட்டதன் பின்) 'அல்ஹம்து லில்லாஹில்லதி அத்அமனி ஹாதா வரஸகனீஹி மின்கைரி ஹவ்லின் மின்னி வலா குவ்வா என்று கூறுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்' (திக்ரின் கருத்து ) எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே எனக்கு இந்த உணவை அளித்தான். என்னிடமிருந்து எந்தவித சக்தியும் முயற்சியுமின்றியே எனக்கு இதனை அருளினான்;)

21- என்னுடைய ரப்பே! எனது தவறுகளையும், அறியாமையையும், எனது எல்லா விவகாரங்களிலும் நான் செய்த எல்லைமீறல்களையும், என்னை விட நீ அறிந்தவைத்திருப்பவற்றையும் மன்னித்து விடுவாயாக! யா அல்லாஹ்! எனது பாவங்களையும், நான் வேண்டுமென்று செய்தவற்றையும், எனது அறியாமையையும், எனது பரிகாசத்தையும் மன்னித்துவிடுவாயாக! அவை அனைத்துமே என்னிடம் உள்ளன. யா அல்லாஹ்! நான் முற்படுத்தியவைகள், பிற்படுத்தியவைகள், மறைத்துக்கொண்டவைகள், பகிரங்கப் படுத்தியவைகள் என அனைத்தையுமே மன்னித்துவிடுவாயாக! நீயே முற்படுத்துபவன்! நீயே பிற்படுத்துபவன்! நீ அனைத்திற்கும் சக்தியுள்ளவன்

28- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிகவும் அதிகமாக ஓதும்; பிரார்த்தனையாக ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக!

31- 'நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது 'உங்கள் விரிப்புக்குச் செல்லும்போது' முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்' என்று சொன்னார்கள்

32- யார், 'பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் பில் அர்ழி வலா பிஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம் (எவனுடைய பெயர் இருக்கும் போது, இவ்வானத்திலோ, பூமியிலோ எந்தவொன்றும் தீங்கை ஏற்படுத்தமாட்டாதோ, அந்த அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு (காலையை, மாலையை அடைகின்றேன்) அவன் செவிமடுப்பவனாகவும், அறிந்துள்ளவனாகவும் இருக்கின்றான்) என்று மூன்று தடவை கூறுகின்றாரோ, அவர் காலையை அடையும் வரை, அவருக்கு எந்த திடீர் சோதனைகளும் ஏற்படமாட்டாது

34- உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, 'இன்னின்னவற்றைப் படைத்தவன் யார்?' என்று கேட்டுக்கொண்டே வந்து இறுதியில் அவரிடம், 'உன் இறைவனைப் படைத்தவன் யார்?' என்று கேட்பான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் எட்டும்போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) அவர் விலகிக் கொள்ளட்டும்

35- உங்களில் ஒருவர் பள்ளிக்குள் (மஸ்ஜிதினுள்) நுழைகையில் 'அல்லாஹும்மப்பதஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் உனது அருளின் வாயில்களை எனக்கு திறந்து தருவாயாக). அவர் பள்ளியிலிருந்து வெளியேறும் போது 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் நான் உனது அருளை வேண்டுகிறேன்')