வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் - الصفحة 2

வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் - الصفحة 2

5- உங்களில் ஒருவர் பள்ளிக்குள் (மஸ்ஜிதினுள்) நுழைகையில் 'அல்லாஹும்மப்பதஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் உனது அருளின் வாயில்களை எனக்கு திறந்து தருவாயாக). அவர் பள்ளியிலிருந்து வெளியேறும் போது 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் நான் உனது அருளை வேண்டுகிறேன்')

34- அல்லாஹ் ' உங்களுக்கும் தர்மம் செய்யக் கூடியவற்றை அருளவில்லையா?" ஒவ்வொரு 'தஸ்பீஹும்'; (ஸுப்ஹானல்லாஹ்) ஒரு தர்மமாகும் (ஸதகாவாகும் ). ஒவ்வொரு தக்பீரும்' (அல்லாஹு அக்பர்) ஒரு ஸதகாவாகும். ஒவ்வொரு தஹ்லீலும் (லாஇலாஹ இல்லல்லாஹ்) ஒரு ஸதகாவாகும்.ஒரு நன்மையை ஏவுவதும் ஸதகா. ஒரு தீமையை தடுப்பதும் ஸதகா. உங்கள் மனைவியரோடு உடலுறவுகொள்வதும் ஸதகா