இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை - الصفحة 2

இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை - الصفحة 2

26- அல்லாஹ் (மறுமையில்) சொர்க்க வாசிகளை நோக்கி, 'சொர்க்கவாசிகளே!' என்று அழைப்பான். அதற்கு அவர்கள் 'எங்கள் இரட்சகனே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் 'திருப்தி அடைந்தீர்களா?' என்று கேட்பான். அதற்கு அவர்கள் 'உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா?'

31- யாராவது அதானைக் கேட்ட போது, 'அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மா, வஸ்ஸலாதில் காஇமா, ஆதி முஹம்மதனில் வஸீலத வல் பழீலா, வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்' என்று கூறுகின்றாரோ, அவருக்கு மறுமையில் எனது சபாஆ (பரிந்துரை) கிடைக்கும். துஆவின் அர்த்தம் : யா அல்லாஹ் இந்த முழுமையான அழைப்பினதும் நிலையான தொழுகையினதும் ரப்பே! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வசீலா என்னும் அந்தஸ்தையும், சிறப்பையும் கொடுப்பாயாக! நீ வாக்களித்திருக்கின்ற புகழுக்குரிய அந்தஸ்துக்கு அவரை அனுப்புவாயாக

38- அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை' என்று கூறினார்கள்

40- உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, 'இன்னின்னவற்றைப் படைத்தவன் யார்?' என்று கேட்டுக்கொண்டே வந்து இறுதியில் அவரிடம், 'உன் இறைவனைப் படைத்தவன் யார்?' என்று கேட்பான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் எட்டும்போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) அவர் விலகிக் கொள்ளட்டும்

45- 'அறிவு உயர்த்தப்படுதல், அறியாமை மேலோங்குதல், விபச்சாரம் பெருகுதல்; மது அருந்துவது சர்வசாதாரணமாகிவிடுதல், ஆண்களின் எண்ணிக்கை குறைதல், ஐம்பது பெண்களுக்கு ஒரு ஆண் மட்டுமே அவர்களைக் கவனிக்கும் -நிர்வகிக்கும்-அளவுக்கு பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்றன மறுமை நாளின் அடையாளங்களுள் சிலதாகும்

48- 'என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!

53- (மறுமை நாளில்) உங்களில் எனது தடாகத்திற்கு நீர் அருந்த வருவோரை எதிர்பார்த்திருப்பேன்.அப்போது சிலர் என்னிடம் வராது (அல்கவ்ஸர் தடாகத்தை விட்டு) தடுக்கப்படுவார்கள்;. உடனே நான் இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்

75- நான்கு பண்புகள் உள்ளன. அவை எவரிடத்தில் உள்ளதோ அவர்; மிகத்தெளிவான நயவஞ்கராவார். இந்தப் பண்புகளில் ஏதாவது ஒன்று ஒருவரிடம் காணப்படுமாயின் அவர் அதனை விட்டும் வரையில் அவரிடம் நயவஞ்சகத்தின் பண்புகளில் ஒன்று உள்ளது. அப்பண்புகளாவன. பேசினால் பொய்யுரைப்பான். ஒப்பந்தம் செய்தால் அதில் மோசடி செய்வான். வாக்களித்தால் மாறுசெய்வான். வழக்காடினால் -விவாதம் செய்தால்- நேர்மை தவறி நடந்து கொள்வான்”

89- ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமைகள் ஆறு என நபியவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அவை எவை எனக் கேட்கப்பட்டது ? அதற்கு நபியவர்கள் : ஒரு முஸ்லிமைச் சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறுவீராக. அவர் உன்னை (விருந்துக்கு) அழைத்தால் அதற்கு பதிலளிப்பீராக. உன்னிடம் அறிவுரை கேட்டால் அவருக்கு அறிவுரை கூறுவீராக. அவர் தும்மி அல்ஹம்து லில்லாஹ் என்று கூறினால் அதற்கு யர்ஹமுகல்லாஹ் என்று கூறுவீராக. அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை சுகம் விசாரிக்கச் செல்வீராக. அவர் மரணித்துவிட்டால் அவரை அடக்கம் செய்வதற்காக பின்தொடர்ந்து செல்வாயாக என்று கூறினார்கள்

94- (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்றுதிரட்டுவான். அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதை அவர்கள் செவியுற முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்துசேரும்