உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்

உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்

20- 'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது

24- “நிச்சயமாக இந்த உலகம் இனிமையும் பசுமையும் நிறைந்தவை. நீங்கள் எவ்வாறு செயலாற்றுகிறீர்கள் என்பதை பார்ப்பதற்காக அல்லாஹ் உங்ளை இதில் பிரதிநிதியாக-முகவர்களாக- ஆக்கியுள்ளான். ஆகவே நீங்கள் உலகவிடயங்களில் மூழ்கிவிடுவதிலிருந்தும் மற்றும் பெண்கள் விடயங்களில் மதிமயங்கி விடுவதைவிட்டும் எச்சரிக்கையாக இருங்கள்

45- நான்கு பண்புகள் உள்ளன. அவை எவரிடத்தில் உள்ளதோ அவர்; மிகத்தெளிவான நயவஞ்கராவார். இந்தப் பண்புகளில் ஏதாவது ஒன்று ஒருவரிடம் காணப்படுமாயின் அவர் அதனை விட்டும் வரையில் அவரிடம் நயவஞ்சகத்தின் பண்புகளில் ஒன்று உள்ளது. அப்பண்புகளாவன. பேசினால் பொய்யுரைப்பான். ஒப்பந்தம் செய்தால் அதில் மோசடி செய்வான். வாக்களித்தால் மாறுசெய்வான். வழக்காடினால் -விவாதம் செய்தால்- நேர்மை தவறி நடந்து கொள்வான்”

57- 'ஆதமுடைய மகன் நிரப்பக் கூடிய பைகளில் மிகவும் கெட்டது அவனின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நிமிர்த்திக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்'

65- 'நீங்கள் பரஸ்பரம் பொறாமை கொள்ள வேண்டாம். ஒருவருக்கொருவர் கோபம் கொள்ள வேண்டாம் (பிறரை அதிகவிலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை உயர்த்த வேண்டாம். ஒருவரை ஒருவர் வெறுக்க வேண்டாம், ஒருவரை ஒருவர் புறக்கணிக்க வேண்டாம். உங்களில் சிலர் சிலரின் வியாபரத்திற்கு எதிராக வியாபாரம் செய்ய வேண்டாம். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்