தொழுகை

தொழுகை

8- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் இதனை ஓதுவார்களெனக் கூறினார்கள். பொருள் : உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் புகழனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன், தீமையிலிருந்து விலகுவதும் நன்மையின் மீது ஆற்றல் பெறுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத்தவிர வேறெவரையும் நாங்கள் வணங்கமாட்டோம். அருட்கொடைகள் அனைத்தும் அவனுடையதே. சிறப்பும் அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையன. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன

13- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையில் 'அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வஆபினீ வஹ்தினீ வர்ஸுக்னீ' என்று கூறுபவர்களாக இருந்தார்கள்;. பொருள் : யாஅல்லாஹ் ! என்னை மன்னித்து விடுவாயாக, எனக்குக் கிருபை செய்வாயாக ,எனக்கு ஆரோக்கியத்தைத் தருவாயாக, எனக்கு நேர்வழி காட்டிடுவாயாக, எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக'

20- 'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது

30- அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (எனது இரண்டு கைகளையும் பிடித்து) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே என் கை இருந்த நிலையில், குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) தஷஹ்{ஹதை (அத்தஹிய்யாத்தைக்) எனக்கு அவர்கள் கற்றுத்தந்தார்கள்

44- 'யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவைகளும், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் என்று 33 தடவைகளும் ஆக மொத்தம் 99தடவைகள் கூறிவிட்டு 100 வதாக லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீ(க்)க லஹூ லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (பொருள்: உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்) எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்'

52- உங்களில் ஒருவர் பள்ளிக்குள் (மஸ்ஜிதினுள்) நுழைகையில் 'அல்லாஹும்மப்பதஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் உனது அருளின் வாயில்களை எனக்கு திறந்து தருவாயாக). அவர் பள்ளியிலிருந்து வெளியேறும் போது 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் நான் உனது அருளை வேண்டுகிறேன்')