பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

15- நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான்

29- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் இதனை ஓதுவார்களெனக் கூறினார்கள். பொருள் : உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் புகழனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன், தீமையிலிருந்து விலகுவதும் நன்மையின் மீது ஆற்றல் பெறுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத்தவிர வேறெவரையும் நாங்கள் வணங்கமாட்டோம். அருட்கொடைகள் அனைத்தும் அவனுடையதே. சிறப்பும் அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையன. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன

39- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையில் 'அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வஆபினீ வஹ்தினீ வர்ஸுக்னீ' என்று கூறுபவர்களாக இருந்தார்கள்;. பொருள் : யாஅல்லாஹ் ! என்னை மன்னித்து விடுவாயாக, எனக்குக் கிருபை செய்வாயாக ,எனக்கு ஆரோக்கியத்தைத் தருவாயாக, எனக்கு நேர்வழி காட்டிடுவாயாக, எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக'

50- 'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது

58- அல்லாஹ்வின் மீதாணையாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தரமாட்டேனென்று சத்தியம் செய்த பிறகு இவற்றை நாம் வாங்கிச் சென்றால் இவற்றில் நமக்கு வளம் (பரக்கத்) ஏற்படாதே! என்று கூறினார்கள். ஆகவே, நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (திரும்பவும்) சென்று, அவர்களுக்கு அதை நினைவு படுத்தினோம். அப்போது அவர்கள், 'நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை; மாறாக, அல்லாஹ்தான் உங்களை (அதில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனிமேல் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, பிறகு அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும் பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரம் செய்து விடுவேன்' என்று சொன்னார்கள்

66- “நிச்சயமாக இந்த உலகம் இனிமையும் பசுமையும் நிறைந்தவை. நீங்கள் எவ்வாறு செயலாற்றுகிறீர்கள் என்பதை பார்ப்பதற்காக அல்லாஹ் உங்ளை இதில் பிரதிநிதியாக-முகவர்களாக- ஆக்கியுள்ளான். ஆகவே நீங்கள் உலகவிடயங்களில் மூழ்கிவிடுவதிலிருந்தும் மற்றும் பெண்கள் விடயங்களில் மதிமயங்கி விடுவதைவிட்டும் எச்சரிக்கையாக இருங்கள்

74- அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (எனது இரண்டு கைகளையும் பிடித்து) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே என் கை இருந்த நிலையில், குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) தஷஹ்{ஹதை (அத்தஹிய்யாத்தைக்) எனக்கு அவர்கள் கற்றுத்தந்தார்கள்

79- உண்மையாகவே அல்லாஹ்விடம் வீரமரணத்தை வேண்டுபவர் தனது படுக்கையில் மரணித்தாலும் உயிர்த்தியாகிகளின் அந்தஸ்துக்களை அடையச் செய்வான்". 'யார் அல்லாஹ்விடம் உண்மையாகவே ஷஹாதத்தை (வீரமரணத்தைக்) கேட்கிறாரோ, அவர் தனது படுக்கையில் இறந்தாலும், அல்லாஹ் அவரை தியாகிகளின் (இறைபாதையில் வீரமரணம் அடைந்தோர்) தரத்திற்கு உயர்த்துவான்.'

82- நான் அதிகமாக 'மதி' எனும் இச்சை (ஆசை)நீர் வெளிப்படுபவனாக இருந்தேன். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளுடைய கணவன் என்பதால் இது பற்றி வினவுவவதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அதனால் அவர்களிடம் இது பற்றி கேட்டு வருவதற்கு அல்மிக்தாத் இப்னுல் அஸ்வத் அவர்களை அனுப்பினேன். அவர் சென்று கேட்டபோது; 'அவர் தனது ஆண்குறியைக்(ஆணுறுப்பை) கழுவிவிட்டு வுழு செய்யட்டும்

99- ' (பிரதிவாதியை விசாரிக்காமல் ) மக்களின் வாதத்திறமையின் அடிப்படையில் அவர்கள் கோருவதெல்லாம் வழங்கப்பட்டால், மக்களில் பலர்; ஏனைய மனிதர்களின் உயிர்க்ளுக்கும் உடமைகளுக்கு உரிமை கோரத் தொடங்குவார்கள். எனவே உரிமை கொண்டாடும் வாதி அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும், அதனை மறுப்பவர் -பிரதிவாதி- சத்தியம் செய்ய வேண்டும்.'